ஆன்லைன் மூலம் விற்கும் பொருட்களின் பெரிய அளவிலான தள்ளுபடிகள் விரைவில் முடிவடையும் : நுகர்வோர்கள் நேரடி சில்லறை விற்பனை கடைகளுக்கு திரும்புவார்களா?

Share & Like

இ-காமர்ஸ் சந்தையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI-Foreign Direct Investment) அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான சில நெறிமுறைகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது. மேலும் இதன் கிடங்குகள் (warehousing), சரக்குகள் (inventory) மற்றும் பணம் பரிமாற்றம் (payments processing) போன்ற சேவைகளிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இ-காமர்ஸ் சந்தையை பற்றி பார்ப்போம்

IMAGE CREDIT: IIMB

இ-காமர்ஸ் சந்தை

பத்து வருடங்களுக்கு முன்புவரை நாம் எல்லா பொருட்களையும் நேரடியாக கடைகளுக்கு (brick and mortar retailers) சென்று வாங்கிவந்தோம். உதாரணத்திற்கு, நமக்கு தொலைக்காட்சி வாங்கவேண்டும் என்றால்  நமது ஊரில் இரண்டு அல்லது மூன்று தொலைக்காட்சி விற்பனை கடைகள் இருக்கும். அதில் ஏதேனும் ஒரு கடையை தேர்ந்தெடுத்து வாங்குவோம். அதில் இருந்த சிரம்மம் என்னவென்றால் நம்மால் பொருட்களின் விலையை  மற்ற விற்பனையாளர்களுடன்  ஒப்பிட்டு பார்க்க முடியாது, பொருட்களின் மாடல்கள், பிராண்டுகள், நிறங்கள், அளவுகள் போன்றவற்றை ஒப்பிட்டு வாங்கும்  தேர்வுகள் குறைவாக  இருக்கும். வாடிக்கையாளர் சேவைகளை அந்த அளவிற்கு எதிர்பார்க்க முடியாது,  பொருட்களை வாங்கிக் கொண்டு வருவதில் சிரமம் இருக்கும்.

இணையத்தின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பிறகு பல வற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றத்தில் ஒன்றுதான் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பதும்.  இந்த துறை இ-காமர்ஸ் (E-Commerce) எனப்படுகிறது. இ-காமர்சில் உள்ள சிறப்பு என்னவென்றால் விலையை ஒப்பிட்டு பார்க்க முடியும், பொருட்களின் மாடல்கள், பிராண்டுகள், நிறங்கள் போன்ற தேர்வு விகிதம் அதிகமாக இருக்கும், பொருட்களை வீட்டிலிருந்தபடியே வாங்கிவிடலாம், அலைச்சல் குறைவு .

IMAGE CREDIT: THELOGICALINDIAN

1994-ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பிறகுதான் உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகமானது. 2004-ஆம் ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது. இதன் பிறகு பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தியாவில் Amazon, Flipkart, Snapdeal, Myntra.com போன்ற நிறுவனங்கள் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களாகும். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு இ-காமர்ஸ் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட $.100 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் வணிக மாதிரி

விற்பனையாளர்களை, நுகர்வோர்களையும் இ-காமர்ஸ் தளங்கள்  நேரடியாக இணைக்கிறது. விற்பனையாளர்கள்  இ-காமர்ஸ் தளங்களில் இணைந்து தங்களின் பொருட்களை பட்டியலிட்டு  நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகின்றனர். இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களின் பொருட்களை நுகர்வோருக்கு கொண்டுச் சேர்த்தல், பணப் பரிவர்த்தணைகளை கையாளுதல், பொருட்களை கிடங்குகளில் வைத்து கொள்வது போன்ற வேளைகளை செய்கின்றன. இதற்காக விற்பனையாளர்களிடமிருந்து கமிசன் தொகையை பெறுகின்றன.


PLEASE READ ALSO : வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை


ஆனால் ப்ளிப்கார்ட்  நிறுவனம் WS Retail என்ற தனியான விற்பனை நிறுவனத்தை தொடங்கியது. இதேபோல் அமேசான் நிறுவனமும் Cloudtail என்ற விற்பனை நிறுவனத்தை தொடங்கியது. ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பெரும்பாலான விற்பனையை தங்களின் WS Retail மற்றும்  Cloudtail மூலமே விற்பனை செய்து வந்தன.  மற்ற விற்பனையாளர்களின் பொருட்களை  விட தங்களின் பொருட்களையே முன்னிலைப்படுத்தின.  இந்த இரு நிறுவனங்களும் அவ்வப்போது சலுகைகள், தள்ளுபடிகள் கொடுத்து பொருட்களை விற்பனை செய்துவருகின்றன.

மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள்

  • இ-காமர்ஸ் தளங்கள் ஒரு விற்பனையாளர்களிடமிருந்து 25% அதிகமான விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
  • இ-காமர்ஸ் தளங்கள் விற்பனையாளர்களின் பொருட்களை மட்டுமே விற்கும் தளமாக செயல்படவேண்டும். தங்கள் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்த கூடாது.
  • இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம் விலையை குறைக்கவோ, அதிகரிக்கவோ வற்புறுத்தக் கூடாது. விற்பனையாளர்கள்தான் தங்கள் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
    • E-commerceIMAGE CREDIT: IPLEADERS

இது போன்ற சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களின் சொந்த நிறுவனங்கள் மூலம் பொருட்களை அதிக அளவு விற்பனை செய்ய இயலாது. மற்ற விற்பனையாளர்களுக்கும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களையும் தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்ய வற்புறுத்த இயலாது. இதனால் பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஆன்லைனில் இனிவரும் காலங்களில் குறையும்.


PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்


மக்கள் தள்ளுபடிகள் மற்றும் சௌகரியம் போன்ற காரணங்களினால்தான் ஆன்லையின் மூலம் பொருட்களை வாங்குகின்றனர். ஆன்லைனில் தள்ளுபடிகள் குறையும் பட்சத்தில், நேரடி சில்லறை கடைகளுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்படலாம். இதனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் நேரடி சில்லறை விற்பனை கடைகளுக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது.

Share & Like
PRABHAKARAN ELAMVAZHUDHI
He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

PRABHAKARAN ELAMVAZHUDHI

He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

Show Buttons
Hide Buttons