சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த  AliBaba நிறுவனர் ஜாக் மா

Share & Like

ஜாக் மா (jack Ma)  உலகின் மிக வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் ஒருவர். Alibaba நிறுவனத்தை  தொடங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர்சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை மதிப்பு $.212 பில்லியன் டாலர். வருமானத்தின் அடிப்படையில் Alibaba உலகின் 6 வது மிகப்பெரிய இணையத்தளம்.

ஜாக் மா உலகின் மிக வெற்றிகரமான தொழிலதிபர் ஆவதற்கு முன் பல தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்துதான் இன்று சீனாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். எல்லா தோல்விகளையும் தனது தன்னம்பிக்கையால் எதிர்கொண்டவர் ஜாக் மாஜாக் மா இன்று உலகின் பல பேருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

ஜாக் மா

பள்ளி தேர்வில் பல தோல்விகளை கண்டவர்

ஜாக் மா கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஒருமுறை சார்லி ரோஸ் என்பவர் எடுத்த பேட்டியின் போது, ஜாக் மா ” நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில்  2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.

ஜாக் மா கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். குறிப்பாக இளமை காலத்தில் பள்ளிப் படிப்பில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தார். எனினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் (passionate) விஷயங்களில்  சிறந்து விளங்கினார். உதாரணத்திற்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டிருந்தார்.

ஜாக் மா ஒருமுறை கூறினார் “நீங்கள் ஒருபோதும் முயற்சியே எடுக்கவில்லையென்றால், வாய்ப்புகளே இல்லை என்று உங்களுக்கு எப்படி  தெரியும்?”

கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர்

தேர்வில் தோல்வியடைவது என்பது ஒரு வகை, ஆனால் நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 1 சதவீதம் மட்டுமே எடுப்பது என்பது தோல்வியையைவிட வேறுவிதமான வீழ்ச்சி. அந்த நாட்களில் ஜாக் மா கணித பாடத்தில் (mathematics) மிகவும் போராடினார். 

“நான் கணக்கில் சிறந்தவனல்ல, மேலாண்மை கற்றவனுமில்லை, இன்றும் என்னால் கணக்கியல் அறிக்கைகளை படிக்க இயலாது” என்று ஒருமுறை கூறினார். பில்லியனர் (billionaire) ஆவதற்கு கணக்கில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதை மாற்றியவர். 

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா (jack Ma) இளமைப்பருவத்தில் கணினி என்ன வார்த்தையை கூட கேட்காதவர். 1980 ஆண்டில் Hangzhou Normal பல்கலைக்கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.

ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர் 

“நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 10 முறை விண்ணப்பித்தேன், விண்ணப்பித்த 10 முறையும் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் என்றாவது ஒரு நாள் நான் அங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் என்று எனக்குள் கூறிக்கொள்வேன்”.   இந்த புறக்கணிப்புகள் ஒருபோதிலும் அவரை பின்னடையச் செய்ததில்லை.

jack ma

30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து 30 லும் தோல்வியடைந்தவர் 

ஜாக் மா பட்டம் பெற்றப் பின் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார், விண்ணப்பித்த 30 வேலைக்கும் நிராகரிக்கப்பட்டார். அவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைக்கும் அணுகினார், “நீங்கள் சிறந்தவர் இல்லை (You’re no good) ” என்று காரணம் கூறப்பட்டு அதிலும் புறக்கணிக்கப்பட்டார்.

KFC-யில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் ஜாக் மா மட்டுமே நிராகரிக்கப்பட்டவர்

நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் 23 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். அந்த ஒருவர்  ஜாக் மா ஆவார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு கொண்டிருக்காதவர் என்பதற்காக. இந்த புறக்கணிப்புகள் யாவும் அவரின் தன்னம்பிக்கையையும், உறுதியையும் ஒருபோதும் குறைத்ததில்லை.

முதல் தொழில் முயற்சியில் தோல்வியடைந்த ஜாக் மா  

ஜாக் மா இணையம் பற்றி அறிந்தப் பிறகு, China Page என்ற சீனாவின் முதல் ஆன்லைன் telephone directory-ஐ தொடங்கினார். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியடைந்து China Page-லிருந்து வெளியேறினார்.

ALIBABA JACK MAA

Alibaba இலாபம் இல்லாத தொழில் என முதலீட்டாளர்களால் கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது 

1998 ஆண்டில் ஜாக் மா பொருள் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர்களை இணைக்கும் Alibaba என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவர் பல தோல்விகளால் பாதிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் வரை Alibaba எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை.

ஜாக் மா Alibaba விற்கு முதலீட்டை (fund) பெற சிலிக்கான் வேலி முதலீட்டாளர்களிடம் அணுகிய போது, இலாபம் இல்லாத தொழில் மாதிரி (unprofitable business model) என்று கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது. பணப்பரிவர்த்தனை (payments) செய்வதில் மிகுந்த சவால்களை Alibaba சந்தித்தது.

எந்த வங்கியும் Alibaba நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. எனவே ஜாக் மா Alipay என்ற சொந்த பண பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.

ஜாக் மா Alipay என்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூரினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலமே  நடைபெறுகின்றன.


Please Read Also: Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்


Share & Like
PRABHAKARAN ELAMVAZHUDHI
He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

PRABHAKARAN ELAMVAZHUDHI

He is an aspiring Entrepreneur. A wanderer in the Entrepreneurship & startup space. He likes learning new things. His favorite Quote is I may not be there yet, but i'am closer than i was yesterday.

Show Buttons
Hide Buttons