உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா (India world’s 7th most valuable Nation Brands )
உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகளின் பட்டியலை (‘The World’s Most Valuable Nation Brands’) உலகின் மிகப்பெரிய பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான ‘Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது (India world’s 7th most valuable ‘Nation Brand).
Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’) நிறுவனம் உலகின் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பலம் (strength), மதிப்பு (value), அடுத்த ஐந்து வருடங்கள் விற்பனையின் கணிப்பு (Five year forecasts of sales of all brands in each nation) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (The Gross domestic product (GDP)) உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகளின் பட்டியலை (The World’s Most Valuable Nation Brands) தயாரிக்கிறது.
இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து 2.1 பில்லியனாக டாலராக உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இந்தியா இருந்தது.
இந்த பட்டியலில் அமெரிக்கா 19.7 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், 2-வது இடத்தில் சீனாவும், 3வது மற்றும் 4-வது இடத்தில் ஜெர்மனியும், இங்கிலாந்தும், 5-வது இடத்தில் ஜப்பானும் , 6-வது இடத்தில் பிரான்சும் உள்ளது .
இந்தியாவில் ‘Incredible India’ என்னும் பிரச்சார கோஷம் (slogan) நன்றாக வேலை செய்திருப்பதாக Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) பிரச்சினையால் ஜெர்மனி சரிவு கண்டிருக்கிறது. அந்த நாடு தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்தாலும் பிராண்ட்களின் மதிப்பு 4 சதவீதம் சரிந்திருக்கிறது.
PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)
உலகின் மிகவும் மதிப்புமிக்க 20 பிராண்ட் நாடுகளின் பட்டியல் (Top 20 most valuable Nation Brands)
PLEASE READ ALSO : உலகவங்கியின் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் (Ease Of Doing Business: India Ranks 130)