பெரும்பாலான தொழில்முனைவோர்கள் தொழிலை தொடங்கும் வயது 28 மற்றும் 29 : Xeler8 பகுப்பாய்வு
Xeler8 ஸ்டார்ட் அப் நிறுவன பகுப்பாய்வு மற்றும் ஒப்பந்தம் சோர்ஸிங் நிறுவனமாகும். இங்நிருவனம் ஸ்டார்ட் அப் நிறுவங்கள் மற்றும் தொழில்முனைவோர்களைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்காக இ-காமர்ஸ், உணவு தொழில்நுட்பம், fintech, சுகாதார, விவசாய தொழில்நுட்பம், மற்றும் தொழில்நுட்பம், data analytics, மற்றும் gaming போன்ற துறையில் உள்ள 2300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை செய்தது. இந்தியா இப்போது உலகின் இளம் ஸ்டார்ட் அப் நாடாக உள்ளது.
இந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள்
தொழில்முனைவோர் இந்தியாவில் எப்போது நிதியுதவி பெறுகிறார்?
தொழில் முனைவோரின் வயது 32 ஆக இருக்கும்போது வெஞ்சர் கேபிடல் மூலம் நிதியுதவி பெற உகந்த வயதாக இருக்கிறது.
பெரும்பாலான தொழில்முனைவோர்கள் 28 மற்றும் 29 வயது இருக்கும்போது தொழிலை தொடங்குகின்றனர்.
இந்தியத் தொழில் முனைவோர்களின் கல்வி
Xeler8 ஆராய்ச்சி நிறுவன பகுப்பாய்வு அடிப்படையில் 47.3% தொழில் முனைவோர்கள் பட்டதாரிகள் ஆவார்கள். அவர்களில் பலர் முதுகலை பட்டதாரிகள் ஆவார்கள். பெரும்பாலான இந்திய தொழில் முனைவோர்கள் சிறந்த கல்லூரிகளில் படிக்காதவர்கள் ஆவார்கள். 16.4 % மட்டுமே IIT மற்றும் IIM-ல் படிப்பை முடித்தவர்கள். 83.6% வேறு கல்லூரிகளில் படித்தவர்கள்.
1.6% தொழில்முனைவோர்கள் கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் ஆவர்.
ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் படிப்பை இடையில் நிறுத்தியதால் தான் மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறார்கள் என்ற வெற்றி மந்திரமாக கருதி சில தொழில்முனைவோர்கள் கல்லூரி படிப்பைப் இடையில் நிறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஹார்வார்டு மற்றும் MITs பல்கலைகழத்திலிருந்து இருந்து நிறுத்தியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள் என்று Xeler8 ஆராய்ச்சி நிறுவன தெரிவித்துள்ளது.
இந்திய தொழில் முனைவோர்களின் பாலினம்
Xeler8 ஆராய்ச்சிபடி 91.4% தொழில்முனைவோர்கள் ஆண்கள், 8.6% தொழில்முனைவோர்கள் மட்டுமே பெண்கள் ஆவார்கள். தொழில்முனைவோர்கள் பாலினத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பாதாக தெரிவித்துள்ளது.
National Sample Survey Organisation எடுத்த Sixth Economic Census ன் படி இந்தியாவில் மொத்தம் 5.8 கோடி தொழிமுனைவோர்கள் இருக்கிறார்கள்.
PLEASE READ ALSO: மின்னணு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் Electronics Development Fund (EDF)