2016-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் பலம் வாய்ந்த 10 பிராண்டுகள் (The World’s 10 Most Powerful Brands in 2016 )
உலகளாவிய முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான Brand Finance நிறுவனம், உலகின் முன்னணி பிராண்டுகளை மதிப்பிட்டு , உலகின் மிகவும் பலம் வாய்ந்த (The World’s Most Powerful Brands) பிராண்டுகளை தரவரிசைபடுத்தி வெளியிட்டுள்ளது.
பரிச்சயம் (familiarity),விசுவாசம் (loyalty), தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி (Promotion), சந்தைபடுத்துதலில் செய்யப்படும் முதலீடு (Marketing Investment), வாடிக்கையாளர் கவனம் (Customer Focus), ஊழியர்களின் திருப்தி (staff satisfaction) மற்றும் நிறுவனத்தின் புகழ் (corporate reputation) போன்ற பல காரணிகளின் அடிப்படையில் உலகின் பலம் வாய்ந்த பிராண்டுகளை தரவரிசைபடுத்தி வெளியிட்டுள்ளது. இந்த காரணிகளை பயன்படுத்தி, ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் வால்ட் டிஸ்னி (Walt Disney), லெகோவை (Lego) முந்தி முதலிடம் பிடித்துள்ளது.
10. Google
பிராண்டின் பலம் (Brand strength) : 89.5
பிராண்டின் மதிப்பு (Brand value): $94.2 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 2
நாடு : அமெரிக்கா
9. NBC
பிராண்டின் பலம் (Brand strength) : 89.7
பிராண்டின் மதிப்பு (Brand value): $16.1 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 72
நாடு : அமெரிக்கா
NBC அமெரிக்காவை சார்ந்த பெரிய தொலைக்காட்சி தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் சேனல் நிறுவனமாகும்.
8. Coca-Cola
பிராண்டின் பலம் (Brand strength) : 90.4
பிராண்டின் மதிப்பு (Brand value): $34.2 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 17
நாடு : அமெரிக்கா
மேலும் படிக்க : 2016-ஆம் ஆண்டின் உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் (20 The most valuable brands of 2016 )
7. Johnson’s
பிராண்டின் பலம் (Brand strength) : 90.7
பிராண்டின் மதிப்பு (Brand value): $15.1 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 79
நாடு : அமெரிக்கா
6. Nike
பிராண்டின் பலம் (Brand strength) : 90.7
பிராண்டின் மதிப்பு (Brand value): $28 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 29
நாடு : அமெரிக்கா
5. McKinsey
பிராண்டின் பலம் (Brand strength) : 91.4
பிராண்டின் மதிப்பு (Brand value): $4.8 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 288
நாடு : அமெரிக்கா
McKinsey & Company நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனம் (management consulting firm) ஆகும். 80 சதவீத உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசனைகளை McKinsey வழங்குகிறது. McKinsey 18,5000 ஊழியர்களை கொண்டு செயல்படுகிறது.
மேலும் படிக்க : சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்
4. PwC
பிராண்டின் பலம் (Brand strength) : 91.5
பிராண்டின் மதிப்பு (Brand value): $18.6 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 58
நாடு : அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
PricewaterhouseCoopers (Pwc) உலகின் மிகப்பெரிய நிதி, சட்ட ஆலோசனைகள் மற்றும் கணக்கியல் நிறுவனம் ஆகும். PwC நிறுவனம் 208,100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் 157 நாடுகளில் செயல்படுகிறது.
3. L’Oréal
பிராண்டின் பலம் (Brand strength) : 91.5
பிராண்டின் மதிப்பு (Brand value): $14.9 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 80
நாடு : பிரான்ஸ்
2. Lego
பிராண்டின் பலம் (Brand strength) : 91.6
பிராண்டின் மதிப்பு (Brand value): $4.5 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 324
நாடு : டென்மார்க்
Lego குழந்தைகளுக்கான பொம்மைகள், விளையாட்டுகள் (Games), பொம்மை படங்கள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த ஆண்டு BranFinance-ன் உலகின் பலம் வாய்ந்த பிராண்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
1. Walt Disney
பிராண்டின் பலம் (Brand strength) : 91.8
பிராண்டின் மதிப்பு (Brand value): $31.7 billion
பிராண்ட் மதிப்பு அடிப்படையில் பெற்ற இடம் (Brand value rank): 24
நாடு : அமெரிக்கா
வால்ட் டிஸ்னி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஊடகம் (Mass media) மற்றும் பொழுதுபோக்கு (entertainment) நிறுவனமாகும். Disney Channel, Star Wars, ESPN, Pixar, ABC broadcast television network, போன்றவற்றை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Star Wars திரைப்படம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளதே வால்ட் டிஸ்னி முதலிடம் பிடித்ததற்கு காரணம் Brand Finance என கூரியுள்ளது
மேலும் படிக்க : Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை