வாடிக்கையாளர்களை பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றுங்கள்

Share & Like
வாடிக்கையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை பழக்கமாக மாற்றுங்கள்
                             IMAGE CREDIT: CHRON.COM

சில நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நாம் ஏன் தேர்தெடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்கி கொண்டிருப்போம். இத்தனைக்கும் அந்த பிராண்டுகளின் தரம் அதிகமென்றும், விலை குறைவென்றும் சொல்ல முடியாது. அந்த நிறுவனப் பிராண்டுகளுக்கு போட்டியாக வேறு நிறுவனப் பிராண்டுகளும் சந்தையில் உள்ளன. ஒருவேளை அந்த நிறுவனப் பொருட்களின் விளம்பரத்தின் தாக்கமாக இருக்கலாம், கடையில் எளிதாக கிடைப்பதாக இருக்கலாம், மற்றவர்கள் அந்த பொருட்களை வாங்குவதால் நாமும் அதையே தேர்தெடுக்கலாம். இவை எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிறுவனங்கள் தங்களது பிராண்டை (Brand) வாங்குவதை நம்மிடம் ஒரு பழக்கமாக (Hibitual) மாற்றிவிட்டன.

உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் சோப்பு, எண்ணை, பற்பசை பல வருடங்களாக ஒரே பிராண்டை பயன்படுத்துவோம். இந்த பிராண்டை ஏன்  உபயோகிக்கிறீர்கள் என்று யாரவது கேட்டால் அந்த நேரத்தில் ஒரு பதிலை உருவாக்கி விடுவோம், தரம் அதிகம், விலை மலிவு போன்றவை. இது நாம் வாங்குவதை நிரூபிப்பதற்க்கான பதில்களாக இருக்கும். பல நேரங்களில் எதையும் யோசித்து அந்த பிராண்டுகளை நாம் வாங்குவதில்லை, அதை வாங்குவதை நமக்கு பழக்கமாகி (Habitual) விட்டன அதனால் வாங்கிகொண்டிருபோம்.

இந்த மாதிரியான நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நமது ஆழ்மனதை குறிவைத்து உருவாக்கப்பட்டவை, சந்தைபடுத்தப்பட்டவை. இந்த பிராண்டுகள் நமது ஆழ்மனதை ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கின்றன.


PLEASE READ ALSO: கவலையை கழற்றி வீசுங்கள்


இதேபோல் பல வருடமாக ஒரே கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருப்போம், அதை மற்ற கடைகளையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து வாங்கிகொடிருப்பதில்லை. ஏனென்றால் அந்த கடைகளில் வாங்குவது நமக்கு பழக்கமாக ஆகிவிட்டது. நம்மால் பழக்கத்தை மாற்றுவது கடினம். பழக்கத்தை (Habitual) மாற்றுவதற்கு நமக்கு மிக வழுவான காரணம் தேவைப்படும். அந்த வழுவான காரணம் நமக்கு கிடைக்கும் வரை அதே கடைகளிலும், அதே பொருட்களையும்தான் வாங்கிகொண்டிருப்போம். வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதை ஒரு பழக்கமாக (Habit) மாற்றினால், அவர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார்கள். 

வாடிக்கையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை பழக்கமாக மாற்றுங்கள்
IMAGE CREDIT : MONEYWISE.CO.UK

பொருட்களை வாங்குவதை பழக்கமாக மாற்றுவதற்கு தரம், விலை, சேவை, விளம்பரம், நம்பிக்கை, நாணயம் போன்றவற்றை வாடிக்கையாளர்களின் ஆழ்மனத்தில் புகுத்துங்கள்.        

ஒரு பிராண்ட் (Brand) வெற்றிபெற வேண்டுமானால் முதலில் அது அடிமனதில் உள்ள சிந்தனைகளோடு ஒன்றிப்போக வேண்டும். பொருட்களின் பிராண்ட் பற்றிய ஆழ்மனப் பதிவுகள் அந்தப் பொருளை நம்மை அறியாமலேயே வாங்க வைத்துவிடுகின்றன.

தரம் உயர்ந்த, மலிவு விலை பிராண்ட்கள் சந்தையில் பல இருந்தும் அதை நாம் பயன்படுத்த தயங்குவோம். ஏனென்றால் நாம் உபயோகிக்கும் பிராண்டிற்கு பழக்கப்பட்டுவிட்டோம்.

விலை (Price), பொருள் (Product or Service), இடம் (Place), தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி (Promotion) போன்றவற்றை 4Ps மார்க்கெட்டிங் கலவை (Marketing mix) என்பார்கள். இந்த மார்க்கெட்டிங் கலவையை (Marketing mix) வாடிக்கையாளர்களின் ஆழ்மனதில் புகுத்தி பழக்கமாக (Habit) மாற்றினால் நாம் சந்தைபடுத்துதலில் வெற்றி பெறலாம். 


PLEASE READ ALSO: 2015-ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 10 இணையத்தளங்கள் (Top 10 Google searches by Indians in 2015)


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons