தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக : Z Nation Lab ன் Incubator மற்றும் Accelerator Programme

Share & Like

தொழில் முனைவோர்கள் தொடங்கும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களின் (Tech Startups)  வளர்ச்சிக்கு உதவுவதற்காக Z Nation Lab அதன் Incubator மற்றும் Accelerator Programme ஐ  மும்பையில் தொடங்கியுள்ளது. 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் (mentors), தயாரிப்பை மேம்படுத்துதல் (product development), பட்டய கணக்காளர்கள் (chartered accountants), வழக்கறிஞர்கள் (lawyers),  application மற்றும் web developers,  social media marketing மற்றும் pitching the ideas போன்றவற்றிற்கான உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அமெரிக்க சந்தையில் வளர்வதற்கு தேவையான உதவிகளையும் Z Nation Lab வழங்கும்.

Z Nation Lab
Img Credit:inc42.com

Z Nation Lab ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேலை செய்வதற்கான அலுவலக இடம் (work spaces), இணையம் போன்றவற்றையும் வழங்கும். இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு $50K முதல்  $250k வரை தேவையான நிதியை முதலீட்டு (investment) செய்யும். ஸ்டார்ட் அப்-ல் முதலீடு செய்து  8% முதல் 12% வரை பங்குகளை தன வசம் வைத்துக்கொள்ளும். 

IoT, sensor technology, big data, robotics, medtech, education, mobile, and payments ஆகிய துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் Z Nation Lab கவனம் செலுத்தும். புனே, ஜெய்ப்பூர், பெங்களூரு, சண்டிகர், இந்தூர், சென்னை மற்றும் சிலிக்கான் வேலி ஆகிய நகரங்களில் இதனுடன் இணைந்த மையங்கள் உள்ளன.

இதன் Accelerator Programme க்கு தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட் அப் களுக்கு  15 மாதங்கள் வரை Z Nation உதவிகளை வழங்கும். வாஷிங்டனை சார்ந்த  Launch Dream Accelerator இதற்கான ஆலோசகர்களில் ஒன்றாகும்.  வெஞ்சர் கேப்பிடல் நிறுவனமான (venture capital firm) Draper Nexus Venture இதன்  ஒரு குழு ஆலோசகராக உள்ளது. 

ஸ்டார்ட் அப்கள் அமெரிக்க சந்தையில் (US market) வளர்ச்சி பெற உதவுவதற்காக Z Nation Lab வாஷிங்டனை சார்ந்த GOVonomy உடன் இணைந்துள்ளது. அமெரிக்க அரசுடன் இணைந்து வேலை செய்ய GOVonomy வாய்ப்பினை அளிக்கும். இதன் accelerator programme க்கு  வருடத்துக்கு 4 முறை 25 ஸ்டார்ட் அப்கள் வரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு 

India:

B 7, 32 Corporate Avenue. Off Mahakali Caves Road,
Andheri East, Mumbai, 400069

022-6221-5285 | info@znationlab.com

USA:

4534 Laird Cir, Santa Clara, CA 95054
+1 408-896-7037

http://znationlab.com/


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons