உலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்

Share & Like
#  முகேஷ் அம்பானி (Mukesh Ambani)

Mukesh Dhirubhai Ambani is an Indian business magnate. Chairman, managing director of Reliance Industries Limited (RIL).

mukesh ambani
Credit: financialexpress.com
  • உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
  • பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்.
  • கனவு காணுங்கள்.
  • மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
  • ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
  • வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்.
  • உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள். 
  • உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்.
  • எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

#  ஜாக் மா (Jack Ma) 

Jack Ma is the founder and executive chairman of Alibaba Group. Chinese business magnate and philanthropist. 

 

ஜாக் மா

 

1. புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.

2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive). 

3. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள். 

4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

5.  உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள். 

6.  ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.

7.  உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.

8.  முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.

9.  நிறுவனத்தின்  மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல்,  கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

10. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.


PLEASE READ THIS ARTICLE ALSO:

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த  AliBaba நிறுவனர் ஜாக் மாஜாக் மா


#  லாரி பேஜ் (Larry Page)

Larry Page is an co-founded Google. He is the CEO of Google’s parent company, Alphabet Inc.

larry page
IMAGE CREDIT : WEBCENTER.COM
  • பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள் 
  • தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.
  • நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.
  • உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).
  • சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.   
  • உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக  தீட்டுங்கள்.
  • சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.
  • ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
  • மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.

#  ஜெப் பெசாஸ் (Jeff Bezos)

Jeff Bezos is founder and CEO of Amazon.com. He is an American technology entrepreneur and investor.

amazon
COURTESY: AP PHOTO
  • நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
  • நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).
  • உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
  • வாடிக்கையாளர்கள் மீது  கவனம் செலுத்துங்கள்.
  • நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
  • வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள். 
  • மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
  • உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
  • சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
  • உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல. 

# Robert Kiyosaki

Robert Kiyosaki is an American businessman, investor, self-help author, educator, motivational speaker, activist, financial commentator, and radio personality.

ROBERT KIYOSAKI

  • உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள். 
  • கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.
  • நீங்கள் சேமிப்பதை விட  முதலீடு செய்யுங்கள்.
  • எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள். 
  • உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்

எலன் மஷ்க் (Elon Musk) 

Elon Musk is an Co-founder and CEO of Tesla Motors; CEO and CTO of SpaceX; co-founder and chairman of SolarCity, co-chairman of OpenAI; co-founder of Zip2, and founder of X.com which merged with PayPal of Confinity.

எலன் மஷ்க் (Elon Musk)
Image Source: Mashable
  • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
  • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
  • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
  • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
  • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.
  • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
  • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள். 
  • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.

#  Alan Sugar

Alan Sugar 

Alan Sugar is an  business magnate, media personality, and political advisor. He sold his remaining interest in the consumer electronics company Amstrad, his largest and best-known business venture.

 

 

  • பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம்.
  • உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேட்காதீர்கள்- அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் மாதிரியான அறிவுரை மட்டுமே கூறுவார்கள்.
  • ஒரே நேரத்தில் ஒவ்வொரு அடியாக வையுங்கள். நீங்கள் நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக ஆரம்பியுங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள்.
  • உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? என்று ஆராயுங்கள்.
  • முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்ளவதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும்.
  • உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள்.
  • வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களுக்கு தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள்.
  • யதார்த்தமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயபடுத்த முடியுமா? என்பதை யோசியுங்கள்.
  • பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிவுரைகளை பெறுங்கள்.

#  மார்க் கியூபன் (Mark Cuban)

Mark Cuban is an American businessman and investor. He is the chairman of the HDTV cable network AXS TV. and is the owner of the NBA’s Dallas Mavericks, Landmark Theatres, & Magnolia Pictures.

 

மார்க் கியூபன்
IMAGE CREDIT: CNBC

 

  • உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள்.
  • நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
  • உங்கள்  தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள்  தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம்.
  • உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.
  • உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.
  • ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு  நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால்,  நேரத்தை எப்படி பயனுள்ளதாய்  செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
  • திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை தெரியவரும், இது அவர்களின் ஆற்றலை அதிகபடுத்த உதவும்.
  • உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்.
  • நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குங்கள். யார் யாரிடம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை வரையருங்கள்.
  • ஆடம்பரமான பொருட்களை வாங்காதீர்கள்.
  • உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (PR Firm) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
  • உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை,  பொழுதுபோக்கு போன்றவற்றை புகுத்துங்கள். 

#  Kemmons Wilson

Kemmons Wilson

 

Kemmons Wilson was the founder of the Holiday Inn chain of hotels.

 

  • தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்துநான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள் நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும்.
  • உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி.

 

  • உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சி உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எவ்வளவு கொண்டாடுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி உருவாகும்.
  • ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது.
  • வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும்.
  • சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது.
  • எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
  • கவலைப்படாதீர்கள், கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைபட்டால் உங்கள் நிகழ்காலம் அழிந்துவிடும். கவலையில் எந்த நன்மையையும் கிடையாது.
  • வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
  • வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள்.

# ஆர். ஜி. சந்திரமோகன்

He is Chairman and managing director of Hatsun Agro Product Ltd.  Arun Ice creams, Ibaco ice creams, Arokya and Gomatha milk, Hatsun products. These are Hutsun popular dairy brand in India.

ஆர். ஜி. சந்திரமோகன்
Img Credit: arjunatv

‘பிஸினஸில் இருப்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக்கூடாது.அந்த பணத்தை தொழில் செய்தால் நாலு பேர்க்கு வேலையும் கொடுக்கலாம் நாமும் முன்னேறலாம் தன் கடைசிக் காலம் வரையில் ஜே.ஆர்.டி. டாடா மும்பையில் ஒரு வாடகை வீட்டில்தான் குடியிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! – 


PLEASE READ THIS ARTICLE ALSO:

ஆர். ஜி. சந்திரமோகன்

13 ஆயிரம் ரூபாயில் தொடங்கி இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருள்கள் நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை உருவாக்கிய : ஆர். ஜி. சந்திரமோகன்

 


#  சாம் வால்டன் (Sam Walton)

Sam Walton was founder of the retail chain WalMart. He was an American businessman and entrepreneur.

 

sam walton

 

  • தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது.மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக்கூட தைரியமாக ஏற்றுப் போராடுங்கள். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்!
  • வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும்.
  • ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.
  • நாம் நம்முடைய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.
  • தனிப்பட்டமுறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது மிகப் முக்கியமான விஷயம். நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு அநாவசிய செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.
  • பணமும், வெற்றியும் நமக்கு கிடைக்கும்போது, அதோடு சேர்ந்து வரும் விஷயம் பொறாமை. நம்மைப்போல் வெற்றியடையமுடியாதவர்கள், அந்த இயலாமையை காட்ட நம்மைப்பற்றி பலவிதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைப்போட முயல்வார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும்.
  • வணிகத்துறையில் பெரியதாக ஜெயிக்கவேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக்கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

#  டோனால்ட் டிரம்ப் (Donald Trump)

 

Donald Trump is an American businessman, television personality, author, politician, and the Republican Party nominee for President of the United States in the 2016 election. He is chairman of The Trump Organization.

டோனால்ட் டிரம்ப்
IMAGE SOURCE: ABCNEWS.GO.COM

 

  • நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம். 
  • உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  •  குறிக்கோளை உயர்வாக  வையுங்கள்.
  •  ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள்.
  •  நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள்.
  • உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.  
  •  திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.

PLEASE READ THIS ARTICLE ALSO:

மார்க் ஜுக்கர்பெர்க்

உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons