TiE Chennai அமைப்பு நடத்தும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு : TiECON Chennai 2016
TiE Chennai (The indus Entrepreneurs) அமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு TiECON Chennai 2016 ஐ நவம்பர் 4 – 5 தேதியில் சென்னையில் நடத்தவிருக்கிறது. TiECon Chennai 2016 நிகழ்ச்சி சென்னையில் உள்ள ITC Grand Chola ஹோட்டலில் நடைபெறும்.
2 Days / 19 Sessions
இந்த 2 நாட்கள் மாநாட்டில் 19 அமர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொழில் முனைவோர்கள் சந்திப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் சந்திப்பு, Mentor connect, Workshops, தொழில் முனைவோர்கள் தங்கள் ஐடியாக்களை முதலீட்டாளர்கள் முன்பு சமர்பிக்கும் PitchFest, விருது வழங்கும் விழா, மேலாண்மை குருக்கள் மற்றும் பல நிபுணர்கள் பேச்சிகள் போன்ற பல அமர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறுவன தலைவர்கள் (Enterprise leaders), ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் (Startup founders), வெஞ்சர் கேபிடல் (venture capital), முதலீட்டாளர்கள் (investors) மேலாண்மை குரு (Management Gurus), வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர்கள் உள்ளிட்டோர் TiECon Chennai 2016 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
PitchFest நிகழ்ச்சியில் தொழில் முனைவோர்கள் தங்கள் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை (startup idea) முதலீட்டாளர்கள் முன்பு சமர்பித்து முதலீட்டை பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் TiE Chennai உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய
TiE – Chennai
IIT Madras Research Park – Module 1, Ground Floor, Kanagam Road, Taramani,
Chennai, Tamil Nadu 600 113
Phone: 91 44 6515 4900
http://chennai.tie.org/