Google அதன் Launchpad Accelerator program க்கு இந்திய ஸ்டார்ட் அப்களை அழைக்கிறது : தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர்கள் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்க
பல பெரு நிறுவனங்கள், இளம் தொழில்முனைவோர்கள் தொடங்கும் நிறுவனங்களை வெற்றிகரமானதாக ஆக்க தேவையான உதவிகளை வழங்குகிறது. இதேபோல் கூகுள் (Google) நிறுவனமும் தொழில்முனைவோர்கள் (entrepreneurs) தொடங்கும் ஸ்டார்ட் அப்களை வெற்றிகரமான நிறுவனமாக உருவாக்க பல உதவிகளை வழங்குகிறது. கூகுள் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களை (tech startups) மேம்படுத்துவதற்காக Launchpad Accelerator ஐ 2015 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது.

மூன்றாவது Launchpad Accelerator Program ஜனவரி 30,2017 ல் தொடங்கவுள்ளது. இது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு Google ன் உதவிகள் (support), வழிகாட்டிகள் (mentorship), பயிற்சிகள் (training) மற்றும் வளங்களை (resources) பெறக் கூடிய நிகழ்ச்சியாகும். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள Google Developers space ல் இந்த Accelerator Program நடைபெறும்.
இதில் பங்கேற்க கூகுள் நிறுவனம் இந்திய ஸ்டார்ட் அப்களிடமிருந்து விண்ணப்பங்களை (applications) வரவேற்கின்றது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 24, 2016 ஆகும்.
Launchpad Accelerator Program ல் கிடைக்கும் உதவிகள்
இந்த Launchpad Accelerator ல் 20 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் அணிகளுக்கு, உள்ளூர் சந்தையிலிருந்து (local markets) உலக சந்தை வரை அவர்களின் நிறுவனங்களை மேம்படுத்த தேவையான விரிவான வழிகாட்டுதல்களை (mentoring) google வழங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் 6 மாதங்களுக்கு கூகுளின் நிபுணர்களை அணுகுத்தல் (Google’s expertise), வழிகாட்டிகள் (mentors), உதவிகள் (support), பயிற்சிகள் (training) மற்றும் வளங்களை (resources-e.g., Google Cloud) பெறமுடியும்.
Launchpad Accelerator ல் கலந்துகொள்ளும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் $50,000 வரை இலவச பங்கு முதலீட்டை (equity-free funding) பெற வாய்ப்புள்ளது. 2 வாரங்கள் கூகுள் தலைமையகத்தில் பயிற்சிகள் கொடுக்கப்படும். இதற்கான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்கும்.
தொழில்நுட்பம் சார்ந்த (tech-based) ஸ்டார்ட் அப்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளிலிருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூன்றாவது Launchpad Accelerator Program ல் பங்குபெறும்.
கடந்த Launchpad Accelerator ல் கலந்துகொண்ட இந்திய ஸ்டார்ட் அப்கள்
Doormint, Frankly.me, Holachef, Justride, Murmur, Nestaway and English Dost ஆகிய இந்திய ஸ்டார்ட் அப்கள் first batch ல் கலந்துகொண்டன. Taskbob, MagicPin, Programming Hub, ShareChat, RedCarpet, and PlaySimple Games ஆகியவை second batch ல் கலந்துகொண்டன.
Launchpad Accelerator ல் விண்ணப்பிக்க
கூகுளின் இந்த நிகழ்ச்சியில் விண்ணப்பிக்க : https://developers.google.com/startups/accelerator/
கூகுள் நிறுவனம், Bharat Saves என்ற தளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நிதி திட்டமிடல் (financial planning) தொடர்பான தகவல்களை வழங்கவுள்ளது. இந்த தளம் இல்லதரசிகள், சிறு வணிகர்கள், புதிதாக வேலைக்கு செல்வோர், ஓய்வு பெற்ற நபர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்களை இலக்காக கொண்டு தொடங்கப்படவுள்ளன.
Please Read This For Your Growth: