Ray Kroc கூறிய உலகின் மிகப்பெரிய சங்கிலி தொடர் உணவகம் McDonald’s-ன் வெற்றி ரகசியம்

Share & Like

McDonalds துரித உணவகத்தை பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர் Ray KrocMcDonalds புகழுக்கும் அதன் உலகளாவிய பிராண்ட் பெயருக்கும் சூத்திரதாரியாக செயல்பட்டவர் Ray Krocஅவர் அன்று  ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.

“We are More serious about our hamburgers than anyone else” என்று   அவர் முடிப்பதற்குள் அரங்கெங்கும் வெடித்துக் கிளம்பிய கரஒலி அடங்கவெகு நேரமானதுஅதன் பின் ஒரு சாதாரண விற்பனையாளனாக  ஆக தன் வாழ்க்கையைத் தொடங்கி, McDonalds  சகோதரர்களிடம் வேலைக்குச் சேர்ந்தவர்எப்படி  படிப்படியாக  முன்னேறி  மெக்டோனால்ட் கிளைகளைப் பரப்புவதற்கு அவர்களுக்கு உதவும்  அளவிற்கு உயர்ந்தார்.  மெக்டோனால்டின் உண்மையான  முதலாளிகளே  நினைத்துப் பார்த்திராத  வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துத் தந்த அவர்ஒரு கட்டத்தில் தானே அந்த நிறுவனத்தை சொந்தமாக்கினாலொழிய  உலகத்தரத்திற்கு அந்த நிறுவனத்தை எடுத்துச்செல்ல முடியும் என்ற  தீர்மானத்திற்கு வந்து அதை எப்படி செயல்படுத்தினார் என்பதைப் பற்றி விளக்கியபொழுது  அரங்கில் அப்படி ஒரு அமைதி.

mcdonalds
Image Credits: fineartamerica.com

தன் வருங்காலத்திற்கான முக்கியமான வாழ்க்கைப் பாடத்திற்கான குறிப்புகளையெடுத்தபடியும்கண் இமைக்கவும் மறந்து வேட்கையுடன் அவரது  சொற் பொழிவின் சாராம்சத்தை உள்வாங்கியபடி உலகின் முதன்மையான தொழிற்கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழத்தின் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

 ரே மாணவர்களுடன் தானும் மாணவனாக ஐக்கியம் ஆகியிருந்தபொழுது சில மாணவர்கள் தானாகவே முன்வந்து அவர்மேல் தங்களுக்கிருக்கும் அபிமானம் பற்றி அவரிடம் பெருமிதத்துடன்  பகிர்ந்துகொண்டனர்அந்த வேளையில் எவரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் கூட்டத்தை நோக்கி எழுந்தது ரேயின் குரல்.

என் அருமை நண்பர்களேஇந்த அறையில் இருக்கும் நீங்கள் அனைவருமே அநேகமாக என்னைவிட மெத்தப்படித்தவர்கள்உங்கள் மேதாவித்தனத்திற்கு இப்போது ஒரு சவால். என் கேள்விக்கு யார் சரியான  பதிலை  அளிக்கிறீர்களோ அவருக்கு இங்கே, இப்பொழுதே என் நிறுவனத்தில் வேலை கொடுக்க நான் தயார்  என்று அறிவித்தார்.  குதூகலமுற்ற மாணவர்கள் அந்தக் கேளிக்கை விளையாட்டிற்கு ஆர்வத்துடன் தயாரானார்கள்.
மெக்டோனால்ட் நிறுவனத்தின் வெற்றி இரகசியம்  என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” இதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்ஆனானப்பட்ட Ray கூடக் கையில் மதுக் கிண்ணத்தை ஏந்தியதும் பிதற்ற  ஆரம்பித்துவிட்டார் பாவம்இல்லையென்றால் நம்மைப் பார்த்து இவ்வளவு சாதாரணமானதொரு கேள்வியை கேட்டிருப்பாரா என்று  ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டனரே தவிர யாரும் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க முன்வரவில்லை.
RAy kroc
Image Credit: simplyknowledge.com
 
ரே மீண்டும் ஒரு முறை இன்னும் அழுத்தமாக அதே கேள்வியைக் கேட்டார்இப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மாணவர். “தங்களுடைய  சேவை  மனப்பான்மையும்அந்தப் பர்கரின் சுவையும் தான் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க  முடியாதுஎன்றதோடு தன் கருத்தை யாரெல்லாம் ஆமோதிக்கிறார்களோ அவர்களையெல்லாம் கையை தூக்கச் சொன்னார்அதற்கு கூட்டத்தில் ஒரு மாணவர்  “இது பள்ளி செல்லும் சிறுவனுக்குக்கூடத் தெரியுமேஇவ்வளவு சுலபமான பதில் அளித்தால் வேலை கிடைத்துவிடும் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு  கஷ்டப்பட்டு பட்டம் படித்திருக்க மாட்டோமே.” என்று சொன்னதும் அந்த இடத்தில் பெரும் சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது
 
Ray மேடையேறி அதே கேள்வியை மூன்றாம் முறையாகவும் கேட்டதும் பலரும் எரிச்சலுற்றனர். பல மாணவர்கள் தனக்குத்  தெரிந்த  அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் காலை அவர் ஆற்றிய சொற்பொழிவின்போது எடுத்த குறிப்புகளையெல்லாம் தங்கள் பைகளிலிருந்து உருவி எடுத்தனர்அதிலிருந்த புள்ளி விவரங்களை பரீட்சைக்குப் பதிலளிக்கும் அதே சிரத்தையுடன் ஒப்புவித்தனர்அவரது  சாதனைப்பட்டியல்  அவரிடமே ஒப்புவிக்கப்பட்டது.
 
இதனால் பொறுமையிழந்த ரே பெருமூச்சு விட்டபடி, “ஆல்ரைட் பதிலை நானே சொல்லிவிடுகிறேன்” என்று கூற ஆரம்பித்தார். “பட்டப்படிப்பு  உங்களைச் சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளைகளாகவே தயார் செய்துள்ளது.   பட்டனுபவம் தான் உங்களை ஒரு விஷயத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விஷயங்களைப் பற்றியும் ஊடுருவிப்பார்க்கச் செய்யும் என்று நான் நம்புகிறேன் என்று பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தார் அவர்.
 
நீங்கள் சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் மெக்டோனால்டின் ( McDonald’s) ஒவ்வொரு   கிளையும் ஒரு முச்சந்திக்கூடலிலோ,  மக்கள்   நடமாட்டம்  அதிகம் இருக்கும் இடத்திலோ தான் அமைக்கப்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியும்.  ஆக மற்றவர்களை விட நாங்கள் அதிக பர்கர் விற்க சேவையையும்சுவையையும் விட முக்கியமான பங்கு ஒவ்வொரு கிளை தொடங்குவதற்கு முன்னும் எங்களுக்குள்ள ரியல் எஸ்டேட் அனுபவத்தைக் கொண்டு அதற்கான இடத்தைத் தீர்மானிப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்” என்று தங்கள் வெற்றியின் இரகசியத்தைப் போட்டுடைத்தார்.
Share & Like
Karthikeyan Pugalendi
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.

My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.
Karthikeyan Pugalendi on FlickrKarthikeyan Pugalendi on Google

Karthikeyan Pugalendi

Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications. I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles. My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.

Show Buttons
Hide Buttons