தொழில்முனைவோராக விருப்பம் உள்ளவரா? உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக 4 வார இலவச: Starup India Learning Program
தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு Startup India திட்டத்தை 2016 ல் தொடங்கியது. Startup India மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோராக விரும்புவோர்களுக்கும் பல உதவிகளை செய்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக தொழில்முனைவோர்கள் தொழில்முனைவை கற்றுக்கொள்வதற்கும் மற்றும் வளர்வதற்கும் உதவும் விதமாக மத்திய அரசு Startup India Learning Program தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் தொழில்முனைவை கற்பிக்கும் விதமாக Learning & Development Module என்ற பகுதியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
Startup India Learning Program
Startup India Learning Program எவ்வித கட்டணமும் இல்லாத, 4 வார இலவச ஆன்லைன் நிகழ்ச்சியாகும் (free online entrepreneurship programme). இந்த நிகழ்ச்சியின் நோக்கம் தொழில்முனைவோர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அமைப்பதற்கும் மற்றும் வெற்றிகரமாக நடத்துவதற்கும் தேவையான முக்கிய விசயங்களை வழங்குவதாகும்.
# கற்பிக்கும் தொழில் முனைவோர்கள் & விஷயங்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தொழில்முனைவு வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்விகளை சந்தித்த தொழில் நிறுவனர்களான தீப் கல்ரா (CEO, MakeMyTrip), குணால் பாஹ்ல் (CEO, Snapdeal), பாவிஷ் அகர்வால் (co-founder Olacabs), பணிந்தர சாமா (founder of Redbus.in), ரிச்சா கார் (founder of Zivame) உள்பட 40 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இருந்து கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இதில் Idea Identification and Assessment and Idea validation; Finance & Legal – Building a Legal Foundation & Understanding Finance Basics & Introduction to Business Planning; Pitching & Funding – Fundraising & Valuation , Pitching & Term sheets தொடர்பான கற்பித்தல்கள், வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.
இந்த தொழில் முனைவு சார்த்த கட்டமைப்பு விஷயங்களை சிறந்த வல்லுனர்கள் கொண்டு Startup India Learning Program நிகழ்ச்சியில் கற்பிக்கப்படும்.
Startup India வின் இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் Invest India உடன் UpGrad இணைந்து Startup India Learning Program ஐ வழங்குகிறது. இந்த நிககழ்ச்சி நிறைவடைந்த பிறகு Startup India மற்றும் Invest India ஆகியவற்றிடமிருந்து சான்றிதழ்கள் (Certification) வழங்கப்படும்.
படிப்படியாக வணிகத் திட்டம் (Business Plan) உருவாக்கும் வழிமுறைகளையும் இந்த நிகழ்ச்சின் மூலம் பெறலாம்
# பங்கேற்கும் வழிமுறை
Startup India Learning Program ஆன்லைன் நிகழ்ச்சியை www.startupindia.gov.in/learning-development என்ற இணையதளத்திலும் அல்லது Play Store ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலமும் பங்கேற்கலாம்.
இந்த கற்பித்தல் நிகழ்ச்சி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடக்கிறது. நமக்கு எந்த மொழியில் கற்க விருப்பமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். Sign Up செய்து முதலில் செய்துகொண்டு நமக்கான கணக்கை (account) உருவாக்கவேண்டும்.
பிறகு login செய்து கொண்டு அதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட படிப்படியாக தொழில்முனைவு பற்றி வீடியோக்கள் (video) இருக்கும். ஒவ்வொன்றாக பார்த்த பிறகு அடுத்த வீடியோவை கற்க இயலும். இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ள சக தொழில் முனைவோர்களிடம் interactive discussion forum மூலம் கலந்துரையாடலாம் மற்றும் தொடர்புக்கொள்ளலாம்.
Startup India Learning Program யில் பங்கேற்க : www.startupindia.gov.in/learning-development அல்லது Play Store
Please Read This Article:
வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்