இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாகிய சிக்கிம் (Sikkim Becomes India’s First Organic Agriculture State)
நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகியுள்ளது (Sikkim Becomes India’s First Organic State). சிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிக்கிம் மாநிலம் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த 2003-ல் முன்பு அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை முற்றிலுமாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது. அதையடுத்து, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. பிறகு, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதன் பயனாக இன்று சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் 1.24 மில்லியன் டன் இயற்கை வேளாண்மை பொருட்களில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.