ரிலையன்ஸ் JioMoney என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியது
ரிலையன்ஸ் நிறுவனம் JioMoney என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியுள்ளது. JioMoney என்பது மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய உதவும் அப்ளிகேசனாகும். JioMoney யில் வாடிக்கையாளர்கள் பணத்தை சேமித்து வைத்துகொள்ளலாம். JioMoney டிஜிட்டல் Wallet ஐ பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கிக்கொள்ளலாம்.
JioMoney பயன்பாட்டு விவரங்கள்
ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் JioMoney சேவைக்காக 50,000 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வியாபாரிகளுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் மொபைல் மற்றும் டி.டி.எச் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம் , காப்பீடு (insurance) மற்றும் பிற பிரிமியம் (premiums) தொகையை செலுத்திக் கொள்ளலாம். பணத்தை (money) ஒருவருக்கு அனுப்பிக் கொள்ளலாம் அதேபோல் பெற்றும் கொள்ளலாம்.
JioMoney டிஜிட்டல் Wallet-ல் Jio Money card அல்லது பிற வங்கி credit/debit card இணைத்து அதன் மூலம் பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
Please Read Also: $200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்
JioMoney யில் டிஜிட்டல் வங்கி கணக்கையும் (Digital Bank Account) ஆரம்பிக்கலாம். வாடிக்கையாளரிடம் இருக்கிற வங்கி கணக்கை இதில் இணைத்துக் கொள்ளலாம். JioMoney அப்ளிகேசன் அண்ட்ராய்டு மற்றும் ios யில் கிடைக்கும்.
2015, நவம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரிலையன்ஸ் நிறுவனத்தின் JioMoney சேவைக்கு உரிமம் கொடுத்திருந்தது.
போட்டி நிறுவனங்கள்
Paytm, Mobikwik, Citrus, Freecharge and Oxigen போன்ற மொபைல் Wallet இந்திய நுகர்வோர்களுக்கு ஏற்கனவே ஒரு தேர்வாக இருக்கிறது. நிச்சயம் JioMoney மற்ற நிறுவனங்களுக்கு ஒரு போட்டியை கொடுக்கும்.
Paytm நிறுவனம் மொபைல் Wallet-யில் இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது.
Please Read Also: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்