பார்ப்பவர்களை கவரும் QR CODE

Share & Like

TAMILENTREPRENEUR QR SCAN CODE   இன்றைக்கு ஸ்மார்ட் போன் (Smart Phone) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களின் வளர்ச்சியும் அபரிவிதமாக உள்ளது. QR CODE என்பது Bar Code-ஐ போல உள்ள ஒரு Matrix barcode (or two-dimensional barcode) ஆகும். Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு என்பதாகும். இந்த QR SCAN CODE -ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதில் இடப்பட்டுள்ள தகவல்களை இணையத்தின் மூலம் பெறலாம். QR CODE இப்போது பலவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Business Card (Visiting Card), Brochure, Pamlet, Websites-ல் QR SCAN CODE பயன்படுத்தப்படுகிறது. QR SCAN CODE சதுர வடிவில் மற்றும் கருப்பு, வெள்ளை நிறத்திலும் சில QR SCAN CODE பல நிறங்களிலும் அமைந்திருக்கும்.

QR SCAN CODE-ன் பயன்கள்:

QR CODE AT BUSINESS CARDQR CODE-ஐ இப்போது பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நிறுவனங்களின் விவரங்கள், சேவைகள், முகவரிகள் போன்ற விவரங்களை அறிவதற்கும், நிறுவனப் பொருட்களின் விவரங்களை பற்றி அறிவதற்கும், நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களை அறிவதற்கும் மற்றும் பல தகவல்களை QR CODE-ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதன் தகவல்களை விரைவாக இணையத்தளத்தில் பெறலாம்.

QR SCAN CODE உருவாக்கும் முறை:

QR CODE-ஐ உருவாக்குவதற்காக நிறைய இணையத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான இணையத்தளங்கள் இலவசமாகவே QR CODE-ஐ உருவாக்குகின்றன.

www.qrstuff.com/
https://scan.me/
www.the-qrcode-generator.com/
http://goqr.me
போன்ற இணையத்தளங்களின் மூலம் QR CODE –ஐ உருவாக்கலாம்.

நமக்கு தேவையான தகவல்களை அதன் இணையதள முகவரியை குறிப்பிட்டு QR CODE GENERATOR இணையத்தளத்திலிருந்து QR CODE வடிவமாக பெறலாம். QR CODE-ல் நாம் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரி, தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறியீடாக அமைந்திருக்கும். இந்த QR CODE-ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்யும்போது அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை இணையத்தளத்தில் பெறலாம்.

QR CODE –ஐ Scan செய்வது எப்படி?

Brochure-Printing-with-QR-Code QR Code Scan செய்ய பல Android மென்பொருட்கள் உள்ளன. QR Code Reader மென்பொருட்ளை (Software) மொபைலில் நிறுவிக்கொள்ள வேண்டும். QR Code –ஐ Scan செய்ய மென்பொருட்களில் உள்நுழைந்து மொபைலில் உள்ள கேமரா (Camera) மூலம் Scan செய்ய வேண்டிய QR Code –ல் வைத்து காட்டினால் மென்பொருட்கள் அதில் உள்ள தகவல்களை காட்டும். QR Codeல் இணையதளம் முகவரி இருந்தால் அந்த பக்கங்களை காட்டும், ஏதேனும் தகவல்கள் இருந்தால் அந்த தகவல்களை காட்டும், மின்னஞ்சல் இருந்தால் அந்த முகவரியை காட்டும். அதே போல் எந்த தகவல்கள் இருக்கிறதோ அதை மென்பொருட்களின் மூலம் Scan செய்து பெறலாம்.

QR Code Reader

QR BARCODE SCANNER

QR Droid Code Scanner 

AT&T Code Scanner 

QR Quick Scanner

போன்ற மென்பொருட்கள் QR CODE –ஐ scan செய்ய பயன்படுகிறது. 

தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல QR SCAN -ஐ பல பயன்படுத்தலாம்.

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons