கார் பழுதடைந்துவிட்டால் சீர்செய்ய மெக்கானிக்கை ஏற்பாடுச் செய்துகொடுக்கும் MeriCAR.com
நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காரில் சென்றுகொண்டு இருக்கிறோம். காரில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சென்றால் பயணம் மிக இனிமையாக அமைந்துவிடும். ஆனால் கார் பழுது அடையும்போது நாம்படும் சிரமத்திற்கு அளவேயில்லை. தெரியாத ஊரில் கார் பழுதடைந்து நிற்கும் போது, அதை சீர் செய்வதற்கான மெக்கானிக் மற்றும் நமக்கு உதவுவதற்கான ஆட்கள் பெரும்பாலும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை.
இந்த பிரச்னையையும் வாய்ப்புகளுக்கான ஐடியாக்களாக மாற்றி பல தொழில்முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் கார் பழுதடைந்துவிட்டால் (Car Repair) சீர்செய்ய மெக்கானிக்களை ஏற்பாடுச் செய்துகொடுக்கிறது MeriCAR.com ஸ்டார்ட் அப் நிறுவனம்.
MeriCAR.com செயல்படும் விதம்
MeriCAR.com அருகிலுள்ள கார் பழுது சீர் செய்யும் கடைகள் (Car Repair Shops), மல்டி பிராண்ட் கார் சேவை நிலையங்கள் (Multibrand Car Service station) கண்டுபிடிக்கவும், கார் பராமரிப்பு, கார் வாஷிங், பஞ்சர் போடுதல் போன்றவற்றைகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. வாகனத்தில் எரிப்பொருட்கள் இல்லாத பட்சத்தில் போன்றவற்றைகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
MeriCAR.com ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பல மெக்கானிக் கடைகள், மல்டி பிராண்ட் கார் சேவை நிலையங்கள், பல மெக்கானிக்கள் இணைந்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான நகரத்தில் MeriCAR.com மெக்கானிக்குகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
PLEASE READ ALSO: கார்களுக்கு ஓட்டுனர் தேவைப்படும் பட்சத்தில் ஓட்டுனரை வழங்கும் DriveU ஸ்டார்ட் அப்
கார் பழுது மற்றும் பராமரிப்பிற்கு உதவி தேவைபட்டால் MeriCAR.com இணையதளத்தில் பதிவு செய்தோ அல்லது 08750000555 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவும் தொடர்பு கொள்ளும் போது, நமக்கு அருகிலுள்ள மெக்கானிக்குகளை ஏற்பாடுசெய்து கொடுக்கிறது. MeriCAR மொபைல் அப்ளிகேசன் மூலம் நமக்கு அருகிலுள்ள மெக்கானிக் நிலையத்தை GPS மூலம் கண்டுபிடித்து கொடுத்துவிடும்.
MeriCAR.com தொடக்கம் மற்றும் பெற்ற முதலீடு நிதி
MeriCAR.com ராகேஷ் சிந்தனா என்பவரால் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. My First Cheque என்ற முதலீட்டு நிறுவனத்தின் மூலமும் மற்றும் ராஜன் ஆனந்தன் என்பவரிடமிருந்தும் முதலீட்டை பெற்றுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் MeriCAR.com ஸ்டார்ட் அப் நிறுவனத்தை CROSS ROADS INDIA ASSISTANCE நிறுவனம் வாங்கியுள்ளது. CROSS ROADS நிறுவனமும் வாகன பழுது சீர் செய்து கொடுக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் TrueBil