கார்களுக்கு ஓட்டுனர் தேவைப்படும் பட்சத்தில் ஓட்டுனரை வழங்கும் DriveU ஸ்டார்ட் அப்

Share & Like

கார்கள் வைத்திருக்கும் வீட்டில் காரை ஓட்டத்தெரிந்தவர்  எங்கேனும் வெளியிடங்களுக்கு சென்றிருந்தால் மற்றவர்கள் வெளியே செல்ல வேண்டும் எனும்போது அவர்கள் தங்களது கார்களை பயன்படுத்த முடியாது. அதற்காக கார்களை வைத்திருக்கும் எல்லோராலும் மாத சம்பளத்திற்கு ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்த முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வெளியிலிருந்து ஓட்டுனரை ஏற்பாடு செய்ய வேண்டும். நமக்கு தேவைப்படும் சமயத்தில் ஓட்டுனர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த மாதிரியான சமயத்தில்  ஓட்டுனர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.

 

DriveU
Img Credit: YOURSTORY

 

கார்களுக்கு ஓட்டுனர் தேவைப்படும் பட்சத்தில் ஓட்டுனரை வழங்குகிறது DriveU ஸ்டார்ட் அப் நிறுவனம்DriveU  சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி  போன்ற நகரங்களில் தற்போது ஓட்டுனர்களை வழங்கி வருகிறது. 

தொழில் மாதிரி (Business Model)

DriveU-வின் இணையதளத்திலிருந்தோ, மொபைல் அப்ளிகேஷனிலிருந்தோ நமக்கு தேவைப்படும் இடங்களுக்கு ஓட்டுனர்களை (Driver) பதிவு செய்யலாம். ஓட்டுனர்களை பதிவு செய்தவுடன் அவர்களை பற்றிய விவரங்கள், புகைப்படம் , தொடர்பு எண் போன்றவற்றை அனுப்பி வைக்கிறது. பதிவு செய்தவருக்கு அருகில் உள்ள ஓட்டுனர்களை அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அனுப்பி வைக்கும்.  ஓட்டுனர்களை வழங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை  DriveU கட்டணமாக வசூலிக்கிறது.  


PLEASE READ ALSO:வீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட் அப் NoBroker.com


ஓட்டுனர்களின் பின்னணி சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பாக வாகனம் செலுத்தும் பயிற்சிகளையும் வழங்குகிறது. ஓட்டுனர்களை நாம் மதிப்பிட்டு அதை அவர்களின் தளத்தில் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.

DriverU
IMAGE SOURCE:YOURSTORY

ஓட்டுனர்களுக்கான கட்டணங்களை அவர்களிடம் நேரடியாகவும், Paytm, PayU Money மூலமாகவும் செலுத்தலாம். இப்போது  DriveU-யில் நான்கு நகரங்களிலும் 250 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களும், 6000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் உள்ளனர்.    

தொடங்கியவர்கள் (Founders)

 

ராம் பிரசாத் சாஸ்திரி , அசோகா சாஸ்திரி மற்றும் அகுல்மீத் சிங் சத்தா போன்றவர்களால் DriveU ஸ்டார்ட் அப் 2015, ஜூனில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. DriveU நிறுவனத்தின் பெயர் Humble Mobile Solutions Pvt. Ltd ஆகும். DriveU சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தற்போது தனது சேவையை வழங்கி வருகிறது.


PLEASE READ ALSO: தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்


முதலீட்டு நிதி (Investment)

DriveU 6.8 கோடி ரூபாய் ($1 மில்லியன் டாலர்) முதலீட்டை UNITUS SEED FUND நிறுவனத்திடமிருந்து இப்போது பெற்றுள்ளது. இந்த முதலீட்டை வைத்து மேலும் 10 நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்த போவதாக கூரியுள்ளது. 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons