உணவு பூங்காவில் தொடங்கும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான நாபர்டு வங்கியின் கடன் திட்டம்

Share & Like

ஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு பொருட்கள் உற்பத்தி ஆகும். ஒரு நாடு உணவு பொருட்கள்  உற்பத்தியை அதிகப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு உற்பத்தி செய்த உணவு பொருட்களை எந்தவித இழப்பும் இல்லாமல் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது முக்கியமாகும். 

FOOD PROCESSING

இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30% காய்கறிகள், பழங்கள் வீணாவதாக இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Crop Processing Technology) ஆய்வு தெரிவிக்கின்றது. உணவு பொருட்கள் வீணாவதை குறைப்பதற்கும், உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 

2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு தொழில் முனைவோர்கள் உணவு பூங்காவில் (food parks) புதிதாக தொடங்கும் மற்றும் மேம்படுத்தும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு (food processing units) கடன்களை வழங்குவதற்காக நபார்டு வங்கிக்கு ரூ. 2000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அரசு உணவு பூங்காவை அமைக்க மானியத்தையும் (subsidy) வழங்கி வருகிறது. 


Please Read This For Growth:

International Cooperation Scheme

தொழில் முனைவோர்கள் அரசாங்க செலவில் சர்வதேச வர்த்தக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கலாம்


நபார்டு வங்கி (NABARD) உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு குறிப்பிட்ட வட்டியில் (interest rate) கடன்களை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு பூங்காவில் அமைக்கும் தொழிலுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் கடனை பெற முடியும்.

கடன் அளவு

உணவு பதப்படுத்துதல் (food processing) தொழிலுக்கான நபார்டு கடன் (loan) திட்டத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலக் கடனுதவியை (Term loan) பெறலாம். மாநில அரசால் (State Governments) தொடங்கப்படும் நிறுவனத்திற்கு திட்ட மதிப்பில் 95 சதவீதமும், தொழில் முனைவோர்கள் (entrepreneurs), கூட்டுறவு அமைப்புகள் (Cooperatives), உழவர் தயாரிப்பாளர் அமைப்புக்கள் (Farmers’ Producer Organizations), நிறுவனங்கள் (companies) மற்றும்  கார்ப்பரேட்கள் (corporate) தொடங்கும் தொழிலுக்கு திட்ட மதிப்பில் 75% மும் கடன் வழங்கப்படும். 

கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 7 ஆண்டுகள் ஆகும். கடன் வட்டி விகிதத்தை (interest rates) நபார்டு வங்கி அவ்வப்போது முடிவு செய்து நிர்ணயிக்கும்.

தகுதியுள்ள தொழில்கள் (Types Of Processing Activities)

உணவு பொருட்கள் அறுவடைக்கு பிறகான (post harvest)  மதிப்பு கூட்டுதல் (value addition), சேமித்துவைத்தல் (storage), தூய்மைபடுத்தல், தரம் பிரித்தல், மெருகேற்றல், பேக்கேஜிங், தகர டப்பியில் அடைத்தல், குளிர்வித்தல், உலர வைத்தல்  போன்ற பரவலான பதப்படுத்துதல் செயல்முறைக்கு கடனை பெறலாம்.

பழங்கள், காய்கறிகள், காளான், தோட்டப் பயிர்கள் மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கு, பால் மற்றும் பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி, மீன் மற்றும் பிற நீர்வாழ் மற்றும் கடல் உணவு பொருட்கள், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்,

NABARD BANK

மூலிகைகள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள், காட்டுப் பொருட்கள் முதலியன, பேக்கரி பொருட்கள், திண்பண்டங்கள், சிற்றுண்டி முதலிய நுகர்வோர் உணவு பொருட்கள், துரித உணவுப் பொருட்கள், குடிநீர், குளிர்பானங்கள், மது அல்லாத பானங்கள் முதலியன மசாலா, சுவையூட்டும் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள், சுகாதார உணவுகள் முதலியன மற்றும் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சார்ந்த  தொழிலுக்கு கடனை பெறலாம்.

எந்த வகையான நடவடிக்கைகளுக்கு கடனை பெறலாம்?

தொழிலுக்கு  தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை (infrastructure) ஏற்படுத்துதல் /  மேம்படுத்துதல். நவீனமயமாக்கல் (modernization) மற்றும்  கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை (additional infrastructure) நிறுவுதல்,  உணவு பதப்படுத்தும் செயல்பாடு (operations of the food processing) தொடர்பான தொழிலகம் அமைத்தல்.

தொழில்நுட்பம் மேம்படுத்துதல் (technology upgradation), ஆட்டோமேஷன் (automation), உற்பத்தி திறனை அதிகப்படுத்துதல் ( increased efficiency), பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் (improvement in product quality), செலவை குறைத்தல் (reduction in cost) போன்ற நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு கடனைப் பெறலாம்.

தகுதியுள்ள நிறுவனங்கள் (Eligible Institutions/ Entities)

மத்திய மற்றும் மாநில அரசுகள் (State Governments) அமைக்கும் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் (entrepreneurs), கூட்டுறவு அமைப்புகள் (Cooperatives), உழவர் தயாரிப்பாளர் அமைப்புக்கள் (Farmers’ Producer Organizations), நிறுவனங்கள் (companies), கூட்டு வணிக நிறுவனங்கள் (Joint ventures)  மற்றும்  கார்ப்பரேட்கள் (corporate) ஆகியவை நபார்டு வங்கியில் உணவு பதப்படுத்துதல் தொடர்பாக கடனை பெறலாம்.

நியமிக்கப்பட்ட உணவு பூங்காக்கள்

மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் (Ministry of Food Processing Industries -MOFPI) நிறுவிய உணவு பூங்காக்கள், மாநில அரசின் உணவு பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (special economic zone- SEZs) போன்ற உணவு பூங்காவில் அமைக்கும் தொழிலுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் கடனை பெறமுடியும். 

மேலும் விவரங்களுக்கு 

உணவு பதப்படுத்துதல் கடன் திட்டம் தொடர்பாக நபார்டு வங்கியின் தலைமை மற்றும் கிளை அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

இந்நிறுவனத்தின் சென்னை அலுவலக முகவரி:

NABARD Bank,
48, Mahatma Gandhi Road Post Box No. 6074,
Nungambakkam, Chennai – 34,
Tamil Nadu.
Phone No. : 04428276088
Email : chennai@nabard.org
www.nabard.org


Please Read This Article For Growth:

முத்ரா கடன் திட்டம்

சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons