வங்கி கடன் எளிதாக கிடைக்க வேண்டுமா, அதற்கு சிபில் ஸ்கோரை உயர்த்துங்கள்

Share & Like

நாம் வங்கி அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் முதலில் நம்முடைய சிபில் (CIBIL) ஸ்கோர் எவ்வளவு என்பதை சோதிப்பார்கள். CIBIL என்பது Credit information bureau of India limited என்பதன் சுருக்கம் ஆகும். கடன் வாங்குபவர்களைப் பற்றி்ய விவரங்களை, அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய விவரங்களையும் சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஒரு அமைப்பாகும்.

கடன் (loan) வாங்குபவர்களின் விவரங்கள், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய விவரங்களையும் இந்த அமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. அதாவது, வங்கி (bank) அல்லது நிதி நிறுவனம் (financial institution) கடன் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை CIBIL அமைப்புக்கு தெரிவிக்கும். 

CIBIL
Image Credit: siliconindia.com

நாம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் விதத்தின் அடிப்படையில் CIBIL ஸ்கோர் வழங்கப்படும். இந்த ஸ்கோரை அடிப்படையாக வைத்துதான் மீண்டும் கடனைகளை நம்மால் பெற முடியும்.


கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை எனில், அதனது பாதிப்பு இந்த CIBIL ஸ்கோரில் பிரதிபலிக்கும். அடுத்தடுத்து கடன் கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைந்து விடும்.
CIBIL Score குறைவதற்கான காரணங்கள்
  • வாங்கிய கடனை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால் CIBIL ஸ்கோர் குறையும்.
  • கிரெடிட் கார்டு (credit card) கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் CIBIL ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.
  • அடமானக் கடனை விட (eg. home loan), அடமானம் இல்லாத கடன்  (eg. personal loan, credit card) அதிகமாக இருந்தால் CIBIL ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும்.
  • வீட்டுக் கடன் வாங்குவதால் CIBIL ஸ்கோர் குறையாது. ஆனால் personal loan, credit card போன்ற பிணையில்லாக் கடன்கள் சிபில் ஸ்கோரை குறைக்கக்கூடும்.

PLEASE READ ALSO : தொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்


  • வேறொருவர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தால். அவர்கள் அந்த கடனை திரும்ப செலுத்தாமல் இருந்தாலும் CIBIL ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
  • கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதன் உச்ச வரம்பு  வரை கடனை பெறுவதை தவிர்க்க வேண்டும்.  உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு உச்ச வரம்பு ரூ. 3 இலட்சம் என்றிருந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ரூ.3 இலட்சம் வரை கடன் பெற்றிருந்தால் CIBIL ஸ்கோரை பாதிக்கும்.
  • வீட்டுக் கடன், வாகனக் கடன் (car loan) மற்றும் தனிநபர் கடன் (personal loan) போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை ஒரே நேரத்தில் எடுப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். 
  • கடன் வாங்க குறைந்த வட்டியுள்ள சிறந்த ஒரு வங்கியைத் (bank) தேர்ந்தெடுத்து விண்ணபிக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளினாலும் உங்கள் விவரங்கள் CIBIL அமைப்பிடம் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. 
CIBIL Score அளவுகள் 

 

சிபில் ஸ்கோர்
Image Credit : cashkumar.com

CIBIL ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் வழங்குகிறது. CIBIL ஸ்கோர் அதிகமாக இருக்கும் போது வங்கியிடமிருந்து கடன் கிடைபதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் இருக்கும்.

750 CIBIL ஸ்கோர்களுக்கும் மேல் உள்ளவர்களுக்கே 79% கடன்கள் (loan) வழங்கப்பட்டுள்ளதாக CIBIL அமைப்பு தெரிவிக்கிறது.

கடன் பெற விண்ணப்பிப்பவரின் சிபில் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். இவர்களுக்கு பிற வங்கியிலும் கடன் கிடைப்பது சிரமமாகும்.

விண்ணப்பத்தாரரின் CIBIL ஸ்கோர் சான்றிதழில் NA or NH என்று இருந்தால் அவர்கள் புதிய கடன் விண்ணப்பதாரர்கள் என்று அர்த்தம். இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் பெறவில்லை என்று அர்த்தம்.
சிபில் ஸ்கோர் எப்படி தெரிந்துகொள்வது?
சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை ஆன்லைன் மூலம் விண்ணபித்து தெரிந்துகொள்ள முடியும்.  சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை பெற குறிப்பிட்ட கட்டணம் செலுத்தவேண்டும். 

https://www.cibil.com/creditscore/ இந்த இணையத்தளத்தில் விண்ணபித்து CIBIL ஸ்கோரை தெரிந்துகொள்ளலாம். கடன் பெற விரும்புவோர் CIBIL ஸ்கோரை தெரிந்துகொள்ளவது அவசியம்.
CIBIL Score -ஐ உயர்த்த வழிகள் 

வாங்கிய கடனை நிலுவை தொகை இல்லாமல் உரிய நேரத்தில் செலுத்துதல்.

கடன் வரம்பிற்கு அதிகபட்சமாக கடன் பெறுவதை தவிர்த்தல்.

பிணை இல்லாக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை (credit card) அதிகமாக வாங்குவதை தவிர்த்தல்.

வீட்டுக் கடன் (home loan), வாகனக் கடன் (vehicle loan) மற்றும் தனிநபர் கடன் (personal loan) போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வாங்குவதை தவிர்த்தல்.

முடிந்த வரை யார் கடன்னுக்கும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.


PLEASE READ ALSO : தொழில் முனைவோர்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons