செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கும் வட்டி: ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எப்.) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் இருந்தால், அந்த இ.பி.எப். கணக்கு செயல்படாத பி.எப். இதன்மூலம் கணக்கு என்று அழைக்கப்படுகிறது. செயல்படாமல் இருக்கும் பி.எப். (Employees Provident Fund (EPF)) கணக்குகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வட்டி கணக்கிட்டு வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் (Employees’ Provident Fund Organisation) முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை (Employees’ Provident Fund Organisation) மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கு வட்டி தருவதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 2011-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிறுத்தியது. செயல்படாமல் உள்ள இ.பி.எப். கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை உள்ளது.
இந்த நிலையில், மறுபடியும் இத்தகைய செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கு வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் அடைவார்கள்.