இளைஞர்கள், மாணவர்களின் தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் : துரை ராஜ் – KL University
உலகிலேயே இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியா. அந்த இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமான விசயத்திற்கு பயன்படுத்தினால் நிச்சயம் இந்தியா உலகின் தலைவனாக விளங்கும். அதற்கான முயற்சிகள் பல இடங்களிலிருந்து தொடங்கப்பட்டுவிட்டன. இளைஞர்கள் மாணவர்களாக இருக்கும்போதே அவர்களுக்கு சரியான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தோமானால், நிச்சயம் அவர்கள் உலகில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவருவார்கள். அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், அரசுகள் உள்பட சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும்.
பல கல்லூரிகள் மாணவர்களின் பாடத்திட்டத்தை தாண்டி பல அறிவார்த்த செயல்களை செய்ய மாணவர்களை ஊக்குவிக்கின்றன. இதில் ஒன்று ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள K L University. இந்த பல்கலைக்கழகத்தில் Innovation, Incubation and Entrepreneurship Centre ( IIE) அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்முனைவு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் கனவுடன் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
Innovation, Incubation and Entrepreneurship Centre ( IIE) ன் செயல்பாடு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த K.துரை ராஜ்.
IIE யின் செயல்பாடுகள் மற்றும் தன்னுடைய வழிகாட்டுதல்கள் பற்றி TamilEntrepreneur.com வுடன் பகிர்ந்து கொண்டார் K.துரை ராஜ்.
துரை ராஜ் அவர்களுக்கு 25 ஆண்டுகள் புகழ்பெற்ற கல்லூரிகளில் கற்பித்தல் அனுபவம் உள்ளது. இப்போது 15000 மாணவர்களை கொண்ட K L University யில் Innovation, Incubation and Entrepreneurship Centre ( IIE) ல் தலைமை செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதுமைகளை உருவாக்கும் மனநிலையை ஏற்படுத்துவது, அவர்களின் ஐடியாக்களிலிருந்து முன்மாதிரி தயாரிப்புகளை உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவது, தொழில் முனைவோர்கள் தங்களின் தொழில் ஐடியாக்களை செயல்படுத்தி வர்த்தகமயமாக்குவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்கள், உதவிகள் மற்றும் அறிவுரைகளை நிபுணர்கள் குழு கொண்டு வழங்குகிறது.
புதுமைகள், Incubation மற்றும் தொழில்முனைவிற்கு IIE அளிக்கும் உதவிகள்
தேவையான உள்கட்டமைப்பு வசதி ( infrastructural facilities) மற்றும் வளங்களை (resources) வழங்குகிறது. அனுபவமுள்ள, திறமையான Research Labs, Industrial R&D Labs போன்ற ஆய்வகங்களை ஆராய்ச்சி செய்வோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வழிகாட்டிகள் மற்றும் நிபுணர்கள் குழுக்கள் உள்ளனர். இவர்கள் தொழில்முனைவோர்கள் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு ஆதரவாக நின்று தேவையான உதவிகளை வழங்குவார்கள்.
“ஸ்டார்ட் அப் ஐடியா எண்ணம் உள்ள தொழில்முனைவோர்கள் எங்களை அணுகினால் அவர்களுக்கு ஐடியாக்களை வடிவமைப்பது முதல் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights), காப்புரிமை (patent) பெறுவது, முதலீட்டை திரட்டுவது (fundraising) போன்ற வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தொழில்முனைவு மற்றும் புதுமை (innovation) சார்ந்த நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகளுடன் இணைந்து நடத்தவும் தயாராக உள்ளோம்.
Innovation & Incubation Cell களை அமைக்க விரும்பும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அவற்றை அமைக்கும் விதம், செயல்படுத்தும் விதம் மற்றும் அரசு திட்ட த்திலிருந்து அதற்கான நிதியை பெறுவது போன்றவற்றிற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்க தயாராக உள்ளோம்” என்கிறார் துரை ராஜ்.
துரை ராஜ் அவர்களை அணுக
K.Durai Raj,
Coordinator,
Innovation/Incubation/Entrepreneurship cell (KLU-IIE)
Room No:510,C Block,
Mobile:+91-9581044609
E-Mail: edc@kluniversity.in, durairaj2012@gmail.com
Office Phone: 0863-2399999 Ext:1899
http://www.kluniversity.in/edcnew/
Please Read This For Your Growth: