உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology,Thanjavur)

Share & Like

 iicpt

  நம் நாட்டில் விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. ஆனால், அதைச் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிலில் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள் வீணாவதாக இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Crop Processing Technology) ஆய்வு தெரிவிக்கின்றது. உலக அளவில் பால் உற்பத்தி ( Highest Milk Production, Livestock in the world), கால்நடைகள் உற்பத்தியில் முதலிடம், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் (fruits and vegetables second largest) இரண்டாம் இடம், உணவு தானியங்கள் (food grains) மற்றும் மீன்கள் (Fishes) உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் (third largest) இந்தியா உள்ளது. ஆனால் உணவு பதப்படுத்தும் தொழிலில் நம் நாடு இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.44,000 கோடி அளவுக்கு உணவு பொருட்கள் வீணாக்கப்படுவதாகவும், நாட்டில், தினக்கூலி பெற்றுத்தரும் தொழில் என்ற அளவில் உணவுத்தொழில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இத்தொழில் பிரம்மாண்டமான வளர்ச்சி அடையும் என்றும் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Crop Processing Technology) இந்த ஆண்டு நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

   உணவு பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி அடைந்தால் விவசாயமும், மக்களின் வாழ்க்கையும் மேம்பாடு அடையும் .விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology) உணவுத்துறையில் பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும், உணவு பதப்படுத்துதலுக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறது. உணவு பதப்படுத்துதல் சம்மந்தமான பல்வேறு ஆராய்சிகளை செய்துவருகிறது. இந்திய அரசு உணவு பதப்படுத்தும் துறையின் கீழ் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

தொழில் முனைவோருக்கான தொழில்நுட்பப் பயிற்சி:

இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology) உணவு பதப்படுத்துதல் சம்மந்தமான பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது.

உலர வைத்தல் தொழில்நுட்ப முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தல், சிப்ஸ் வகைகள் , உடல்நலத்திற்கு ஏதுவான பேக்கரி உணவு பொருட்களுக்கான தொழில்நுட்பகள், உடனடி தயார்நிலை உணவு வகைகளுக்கான தொழில்நுட்பங்கள் ,ஆரோக்கியமான துரித உணவு வகைகள், வணிக முறையில் பழரச பானங்கள் தயாரித்தல், தானியங்கள், சிறுதானியங்கள் பயறு வகைகளிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் ,மாம்பழத்திலிருந்து மதிப்புகூட்டப்பட்ட  ரொட்டிசார் அடுமனை பொருட்கள் தயாரித்தல், ப்ரூட்டி தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் ,பழ ஜாம் மற்றும் ஜெல்லி வகைகள் ,வணிக முறையில் பழரசபானங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், ஊறுகாய் தயாரிப்பு தொழில்நுட்ப முறைகள், ரொட்டி மற்றும் ரொட்டி சார் அடுமனை பொருட்கள், சேமியா மற்றும் நூடுல்ஸ் தயாரிப்பதற்கான முறைகள், பாஸ்தா வகைகள் (நூடுல்ஸ், மக்ரூனி, ஸ்பகட்டி மற்றும் சில), இனிப்பு மற்றும் பழவகை உணவு வகைகள் (Dessert), நெல்லியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், வாழைப்பழத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல், மசாலா தயாரிப்பிற்கான தொழில் நட்பங்கள், குக்கீஸ் வகைகள் தயாரிக்கும் முறை, கற்றாழையிலிருந்து பழபானம் தயாரித்தல், முருங்கைக்காயை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், சிறுதானியங்களிலிருந்து பேக்கரி பொருட்கள் தயாரித்தல் ,மால்ட், பிஸ்கட் தயாரிக்கும் முறை, சவ்வூடு பரவுதல் முறையில் தேங்காயைப் பதப்படுத்துதல், முட்டையில்லா பேக்கரி பொருட்கள் ,சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள், முளைகட்டிய அரிசி சார் கேக் வகைகள், காளானிலிருந்து பதன உணவுப் பொருட்கள் தயாரித்தல், உடல்நலத்திற்கு ஏதுவான ஊட்டச்சத்து மாவு வகைகள், தக்காளிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரித்தல் போன்ற பல பயிற்சிகளை அளித்து வருகிறது.

நவீன தொழில்நுட்ப இயந்திர வசதிகளுடன் கூடிய உணவு பதப்படுத்தும் தொழில் முன்னேற்றக் கூடம் (Food Processing Business Incubation Centre) :
  உணவு பதனிடுதல் தொழில்நுட்பத்துக்கான உயர்ரக இயந்திரங்கள் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Crop Processing Technology) உள்ளது. உணவுப் பதப்படுத்துதலுக்கு ஏதெனும் இயந்திரங்கள் தேவைப்படின், இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Crop Processing Technology) உள்ள இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இயந்திரங்களை பயன்படுத்துவதற்க்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உணவுச் சோதனை ஆய்வகம் (FOOD TESTING LABORATORY) :
       உணவுப் பொருட்களை பகுப்பாய்வுச் செய்வதற்கான ஆய்வகம் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Crop Processing Technology) உள்ளது. உணவுப் பொருட்களில் உள்ள கொலுப்பு, விட்டமின், ஈரப்பதம், சத்துக்கள் போன்ற பல சாரம்சங்களை இந்த ஆய்வகத்தில் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

உணவு பதப்படுத்தும் துறையில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கும், விவசாயிகளுக்கும், வேலையில்லாத படித்த இளைய தலைமுறையினருக்கும், பெண்கள் மற்றும் சுய உதவி குழுக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அணுகி இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Crop Processing Technology) பயன்பெறலாம்.

மேலும் விவரங்கள் அறியhttp://www.iicpt.edu.in/

Indian Institute of Crop Processing Technology
Ministry of Food Processing Industries,  Pudukkottai Road, NH 226, Thanjavur,Tamil Nadu -613005

Phone : 04362 – 226676, 04362 228 155

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons