நாட்டின் முதல் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகத்தை அமைக்கிறது : குஜராத்
நாட்டின் முதல் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகத்தை குஜராத் தொடங்கப்போகிறது . பிரத்தியேகமாக இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இப்பல்கலைக்கழகத்தை குஜராத் அரசு தொடங்கப்போகிறது . இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்காக 2016-17 பட்ஜெட்டில் குஜராத் அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.
இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகள் இந்த பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும். நிச்சயம் இந்த பல்கலைக்கழகம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கு ஒரு உந்துதலாக அமையும்.