Google அதன் Google Cloud Platform region ஐ இந்தியாவில் திறக்கவுள்ளது
கூகுள் அதன் புதிய cloud region ஐ மும்பையில் திறக்கவுள்ளது. இந்த Google Cloud region 2017 இல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த cloud region இந்திய developers மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு Google Cloud Platform ஐ வழங்கும்.
இந்தியாவில் Cloud Region ஐ அமைப்பதற்கான அறிவிப்பு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற Horizon நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
Google Cloud டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் தயாரிப்புகளை எளிதாகவும், வேகமாகவும் மற்றும் உச்சபட்ச செயல்திறனுடனும் செயல்படுத்த உதவும்.
இந்தியாவில் ஸ்டார்ட் அப்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. Google Cloud Platform அப்ளிகேசன்களை (applications) உருவாக்க, சோதனை செய்ய மற்றும் வரிசைப்படுத்த போன்ற முழு சேவைகளை வழங்கும்.
Machine Learning, networking services, Compute,Management Tools, Big Data, Compute,Storage and Databases, Developer Tools, Identity & Security ஆகியவை Google Cloud Platform யில் உள்ளதால் நிறுவனங்கள் மற்றும் developers தங்கள் அப்ளிகேசன்கள், மென்பொருட்கள், இணையதளங்கள், data analysis ஆகியவற்றை குறைந்த செலவில் உயர் செயல்திறனுடன் உருவாக்க முடியும்.
கூகுள் நிறுவன அறிக்கையின் படி உலகம் முழுவதும் 1 பில்லியன் வாடிக்கையாளர்கள் Google Cloud ஐ பயன்படுத்துகின்றனர். இந்திய நிறுவனங்களான Wipro, Ashok Leyland, Smartshift by Mahindra & Mahindra, Dainik Bhaskar Group மற்றும் INshorts உள்பட பல நிறுவனங்கள் Google Cloud Platform ஐ பயன்படுத்துகின்றன.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அதே Horizon நிகழ்ச்சியில் G Suite ஐ கூகுள் வெளியிட்டது. இந்த G Suite Gmail, Docs, Drive, Calendar, Hangouts போன்ற பல அறிவார்ந்த பயன்பாடுகளை உள்ளடக்கி இருக்கும்.
Please Read This Article:
சமூக தொழில் முனைவோர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை அளித்து இந்தியாவின் சமூக நிலையை மேம்படுத்தும் : UnLtd Tamil Nadu