ஏற்றுமதியில் EXPORT INSPECTION AGENCIES-ன் பங்குகள்

Share & Like

         export inspection agencies

        EXPORT INSPECTION AGENCIES (EIA) ஒரு மத்திய அரசு நிறுவனமாகும்.EXPORT INSPECTION AGENCIES (EIA) ஏற்றுமதி வர்த்தகத்திற்கு நிறைய சேவைகளை வழங்குகிறது.EXPORT INSPECTION AGENCIES (EIA) நிறுவனம் EXPORT INSPECTION COUNCIL OF INDIA (EIC) என்ற நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.

EXPORT INSPECTION AGENCIES (EIA)-ன் சேவைகள்:

1. Quality Certificates:

   உணவு,வேளாண்மை பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களுக்கான (Food Products) Quality Certificate(தர சான்றிதழ்),Health Certificate(சுகாதார சான்றிதழ்),Authenticity Certificate(நம்பகத்தன்மை சான்றிதழ்),Phytosanitary Certificate போன்றவைகளை வழங்குகிறது.

2. Preferential Certificate Of Origin:

     இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை(Trade Agreements) மேற்கொண்டுள்ளது.வர்த்தக உடன்படிக்கை மேற்கொண்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது , அதற்கான Preferential Certificate-ஐ EXPORT INSPECTION AGENCIES (EIA)-யிடமிருந்து பெற்று இறக்குமதியாளருக்கு அனுப்பும்போது , இறக்குமதியாளர் குறைந்த வரி அல்லது முற்றிலும் வரிவிலக்கு பெறுவார்.இதனால் அவர்களுக்கு செலவு குறைந்து லாபம் அதிகரிப்பதால் மீண்டும் மீண்டும் நம்மிடமிருந்து இறக்குமதி செய்துகொள்வார்.

கீழ்கண்ட Preferential Certificate Of Origin வழங்குகிறது:

 Generalised System of Preferences(GSP) Certificate:

  வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு(Canada,USA,European Union,Russian Federation, France, Germany & etc..) ஏற்றுமதி செய்யும்போது Generalised System of Preferences certificate(GSP)-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 Global System of Trade Preferences(GSTP) Certificate:

  வளரும் நாடுகளுக்கு (Indonesia,Qatar,Colombia,Egypt,Iraq,Brazil,Vietnam,Philippines &etc.,) ஏற்றுமதி செய்யும்போது Generalised System of Trade Preferences(GSTP) certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 ASIA PACIFIC TRADE AGREEMENT(APTA) Certificate:

  ஆசிய பசிபிக் நாடுகளுக்கு(Republic of Korea,Cambodia,People’s Republic of China, Philippines, Thailand) ஏற்றுமதி செய்யும்போது ASIA PACIFIC TRADE AGREEMENT(APTA) certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 SOUTH ASIAN FREE TRADE AREA(SAFTA) Certificate:

  தெற்கு ஆசியா நாடுகளுக்கு(Bhutan,Maldives,Nepal,Pakistan,Srilanka) ஏற்றுமதி செய்யும்போது SOUTH ASIAN FREE TRADE AREA(SAFTA) certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 Saarc Preferential Trading Agreement(SAPTA) Certificate:

   சார்க் நாடுகளுக்கு(Bangladesh,Nepal,Bhutan,Pakistan,Maldives,India,Srilanka) ஏற்றுமதி செய்யும்போது Saarc Preferential Trading Agreement(SAPTA) certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 Indo Sri Lanka Free Trade Agreement(ISFTA) Certificate:

  ஸ்ரீலங்காவிற்கு ஏற்றுமதி செய்யும்போது Indo Sri Lanka Free Trade Agreement(ISFTA) Certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 India Afghanistan Preferential Trading (IAPTA) Certificate:

 India Thailand Free Trade Agreement Certificate:

 Singapore CECA(Comprehensive Economic Cooperation Agreement) Certificate:

 India Chile Trade Agreement Certificate:

 India-MERCOSUR Preferential Trade Agreement (IMPTA) Certificate:

  இலத்தின் அமெரிக்க நாடுகளான Brazil, Argetina, Urguay and Paraguay போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்யும்போது India-MERCOSUR Preferential Trade Agreement (IMPTA) Certificate-ஐ பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

 India-Korea CEPA(Comprehensive Economic Partnership Agreement) Certificate:

 India-ASEAN Agreement Certificate:

INDIA – MALAYSIA COMPREHENSIVE ECONOMIC COOPERATION AGREEMENT (IMCECA) Certificate:

 India-Japan CEPA(Comprehensive Economic Partnership Agreement) Certificate:

3.தரமான முறையில் உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறது-Technical Assistance.

சான்றிதழ்களை பெரும் முறை:

   முதலில் ஏற்றுமதியாளர்கள் தங்களை EXPORT INSPECTION COUNCIL(EIC) இணையதளத்தில் பதிவுச் செய்துகொள்ளவேண்டும். எந்த சான்றிதழ்(Certificate) தேவையோ அதற்கான விண்ணப்ப கட்டணத்தை(Application fee) வரைவோலையின்(Demand Draft) மூலம் EXPORT INSPECTION AGENCIES (EIA) அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்கள்(Invoice,Packing List & etc) மற்றும் சான்றிதழ் கட்டணத்தை(Certificate fee) வரைவோலையாக(Demand Draft) எடுத்து இணைத்து EXPORT INSPECTION AGENCIES (EIA) அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

   முதன் முதலாக சான்றிதழுக்காக(Certificate) விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடி ஆய்வு(Physical Inspection) செய்த பின்னரே சான்றிதழ்(Certificate) வழங்கப்படும். ஆய்வு செய்யும் அலுவலரின் பயண மற்றும் தங்கும் செலவுகளை (Expense of Physical Inspection Officer) ஏற்றுமதியாளர்களுடையது.ஏற்றுமதியாளர்கள்(Exporter) ஒரு பொருட்களுக்கான சான்றிதழை ஆய்வுச் செய்து வாங்கியப்பின் , மீண்டும் குறைந்தபட்சம் 20 முறை அதே பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது நேரடி ஆய்வுச் சோதனை இல்லாமல் சான்றிதழை(Certificate) பெற்றுகொள்ளலாம் . வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது ஒரு முறை ஆய்வு செய்த பின்னர் சான்றிதழ்(Certificate) வழங்கப்படும்.

      ஏற்றுமதியாளர்(Exporter) பொருட்களை வாங்கும் இடத்திற்கு (Procuring Place) அல்லது நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு(Factory) அருகில் உள்ள அலுவலகத்தில்(EIA office) விண்ணப்பித்து சான்றிதழை(Certificate) பெறலாம்.

இணையதள முகவரி:http://www.eicindia.gov.in/

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons