எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் : பீகார் முதலிடம்
மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் தொழிலுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் மாநிலங்களை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion- DIPP) எளிதாக தொழில் செய்ய ஏற்ற (Ease of doing business) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேசம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
340 காரணிகளின் அடிப்படையில், மாநிலங்களை மதிப்பிட்டு இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 91 காரணிகளின் அடிப்படையில் எளிதாக தொழில் செய்யும் மாநில பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியல் நிகழ் நேர அடிப்படையில் தரவரிசைபடுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் எடுக்கும் சீர்திருத்தங்கள் பொறுத்து இந்த தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டலாம்.
பீகார் முதலிடம்
எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் 8.53 மதிப்பெண் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 21 வது இடத்தில் இருந்தது குறிபிடத்தக்கது. இதுவரை தொழில் சம்பந்தமான என்னென சீர்திருத்தங்கள் செய்துள்ளனர் என்று வெளியிட்டுள்ள 16 மாநிலங்களில், பீகார் அதிகபட்சமாக 29 சீர்திருத்தங்கள் செய்துள்ளதாக தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்கள் பெற்றுள்ள இடம்
எளிதாக தொழில் செய்ய ஏற்ற (Ease of doing business) மாநில பட்டியலில் தெலுங்கானா மாநிலம் 6.46 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட்மாநிலம் 6.18 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளது.
மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலம் முறையே 4 மற்றும் 5 வது இடத்தை பெற்றுள்ளது.
குஜராத் 6 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு உலக வங்கி (World Bank) வெளியிட்ட எளிதாக தொழில் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் இருந்தது.
Please Read Also : பெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின் Mahila E-haat ஆன்லையின் தளம்