அமேசான் இந்தியா விற்கும் பெரும்பாலான பொருட்களுக்கு ரீபண்ட் வழங்குவதை நிறுத்தியது
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் மூலம் விற்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதமடைந்திருந்தால் அதற்கு ரீபண்ட் தொகையை (refund) வழங்கிவருகின்றன. அமேசான் இந்தியா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தங்களிடம் வாங்கும் மொபைல்களுக்கு குறைபாடுள்ள அல்லது ஏதேனும் சேதமடைந்திருந்தால் அதற்கு வழங்கும் ரீபண்ட் தொகையை நிறுத்தியது.
இப்போது அமேசான் இந்தியா (amazon india) தங்கள் நிறுவனம் மூலம் விற்கும் பெரும்பாலான பொருட்களுக்கு ரீபண்ட் தொகை வழங்குவதை நிறுத்தியுள்ளது. அதாவது இனி அமேசான் நிறுவனத்திடமிருந்து வாங்கும் மின்னணு பொருட்களான All tablets, மடிக்கணினிகள், கணினிகள், monitors, கேமராக்கள் மற்றும் கேமரா லென்ஸ்கள், Gadgets மற்றும் appliances போன்ற பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதமடைந்திருந்தால் ரீபண்ட் தொகையை வழங்காது. அந்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை மாற்றி ( replacements) மட்டுமே வழங்கும்.
பெரும்பாலான பொருட்களுக்கு வாங்கிய 10 நாட்களுக்குள் மட்டுமே மாற்றிக் கொள்ள கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அமேசான் இந்தியா (amazon india)) தளத்தில் உள்ள policy page யில் இடம்பெற்றுள்ளது.
போட்டியாளர்கள் என்ன வழங்குகிறார்கள்?
அமேசான் இந்தியா முக்கிய போட்டியாளர்களாக Snapdeal மற்றும் Flipkart நிறுவனங்கள் உள்ளன.
Snapdeal நிறுவனத்தின் மூலம் வாங்கும் மின்னணு பொருட்கள் அல்லது மொபைல் பொருட்கள் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதமடைந்திருந்தால் 7 நாட்களுக்குள் Snapdeal நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப பெற முடியும்.
பணத்தை திருப்பி வழங்குவதில் Flipkart கொள்கை சற்று தெளிவற்றதாக உள்ளது. விற்பனையாளர்கள் சில பொருட்களுக்கு மட்டும் நிபந்தனைக்குட்பட்டு ரீபண்ட் தொகையை வழங்குவார்கள். தனிப்பட்ட விற்பனையாளர் Returns Policy யை சரிபார்க்கவும் என்று Flipkart இணையதளத்தின் policy page யில் உள்ளது. இதன் மூலம் Flipkart நிறுவனமும் சில பொருட்களுக்கு refund தொகையை வழங்குகிறது.
Refund ஐ நிறுத்தியதற்கு காரணம்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே பல பொருட்களை மிக குறைந்த லாபத்தில் விற்று வருகின்றன. அதிகமான போட்டியின் காரணமாக சில பொருட்களை நஷ்டத்திற்கும் விற்று வந்தன. ஒருவேளை இதை குறைப்பதற்கு அமேசான் இந்தியா Refund தொகை வழங்குவதை நிறுத்தியிருக்கலாம்.