வேளாண் தொழில்நுட்ப துறையில் மாற்றம் செய்ய விருப்பும் தொழில்முனைவோரா நீங்கள் – உங்களுக்காக AGRIPRENEURS 2016, ஜூன் 18 கோயம்புத்தூரில்
வேளாண்மை சார்ந்த தொழில்கள் செய்யும் எண்ணம் தொழில்முனைவோரிடையே இப்பொழுது அதிகரித்து வருகிறது. இந்திய நாட்டில் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்-கள் நிறைய தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேளாண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. வேளாண் தொழில்நுட்ப துறையில் (Agritech sectors) தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன.
வேளாண் தொழில்நுட்ப துறையில் மாற்றம் செய்ய விருப்பும் தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ஜூன் 18 ஆம் தேதி கோயம்புத்தூரில் AGRIPRENEURS 2016 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
TheMentorpreneurs மற்றும் ByTheStartups இணைந்து AGRIPRENEURS 2016 நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் தொழில்நுட்ப துறையில் தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (Agritech startups /entrepreneurs) தங்கள் ஐடியாக்களை சமர்பிக்கலாம்.
நடைபெறும் நிகழ்ச்சிகள்
தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை பற்றி விளக்கமளிக்க AgriShowcase மற்றும் AgriPitch போன்ற இரண்டு நிகழ்வுகள் உள்ளன. AgriShowcase நிகழ்வில் தொழில்முனைவோர்கள் /ஸ்டார்ட் அப் நிறுவனகள் தங்கள் தயாரிப்பை (product) காட்சிப்படுத்தலாம். AgriPitch -ல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் (investor) முன்னிலையில் தங்களை பற்றி வழங்கலாம்.
இதைதவிர வேளாண் தொழில்முனைவோர் (Agripreneurs) பேச்சுகள், பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் (Panel discussion) மற்றும் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளன.
நடைபெறும் இடம்
AGRIPRENEURS 2016 நிகழ்ச்சி ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது
Nehru Group of Institutions, Thirumalayampalayam, Coimbatore – 641 105.
மேலும் விவரங்களுக்கு மற்றும் கலந்துகொள்ள
For Tickets: https://in.explara.com/e/agripreneurs-2016
For Pitching your Startup Idea send your pitches to : pitch@thementorpreneurs.com
For more information on participation email : thementorpreneurs@gmail.com
Please Read Also : தொழில் முனைவோர்கள் அரசாங்க செலவில் சர்வதேச வர்த்தக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கலாம்