HOW TO GET IMPORTER EXPORTER CODE (IEC) NUMBER?
எந்த ஒரு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கும் Importer Exporter Code (IEC) Number தேவைபடுகிறது. Importer Exporter Code (IEC) Number 10 இலக்கங்களை கொண்டது. Importer Exporter Code (IEC) Number -ஐ மத்திய அரசின் கீழ் இயங்கும் Director general of Foreign Trade (DGFT)-ன் பிராந்திய அலுவலகம்(Regional Office) வழங்குகிறது .
Importer Exporter Code Number (IEC) எங்கே பெறுவது?
Importer Exporter Code Number (IEC) -ஐ Director general of Foreign Trade (DGFT)-ன் பிராந்திய அலுவலகத்தில்(Regional Office) விண்ணபித்து பெறலாம். ஒரு பிராந்திய அலுவலகத்திற்கென்று சில குறிப்பிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த பிராந்திய அலுவலகத்தில் விண்ணபிக்கவேண்டும் என்பதை காண இங்கே கிளிக் செய்யவும் LIST OF REGIONAL AUTHORITIES AND THEIR JURISDICTION.
தேவையான ஆவணங்கள்:
1.Income Tax PAN CARD.
தனிநபர் நிறுவனமாக (Proprietorship) இருந்தால் விண்ணப்பிக்கும் நபரின் PAN CARD போதுமானது. கூட்டு நிறுவனம் (Partnership) மற்றும் LIMITED COMPANY-யாக இருந்தால் நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்ட PAN CARD அவசியம். PAN CARD நகலை சுய கையொப்பம் இட்டு விண்ணபிக்கவேண்டும்.
2.வங்கி கணக்கு(Bank Account)
வங்கி கணக்கு ஏதேனும் வங்கியில்(Bank) நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கு (Current Account) திறக்க வேண்டும்.
3.கூட்டு நிறுவனமாக (Partnership) இருந்தால் பங்குதாரர்களுக்கிடையே போடப்பட்ட கூட்டு ஒப்பந்தபத்திரம் (Partnership Deed).
விண்ணப்பிக்கும் முறை:
Importer Exporter Code விண்ணபத்தை DGFT-ன் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். (IEC விண்ணபத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Application Form for Issue IEC). Aayaat Niryaat Form(ANF2A) என்பது IEC Application form ஆகும். இது Part A, Part B, Part-C, Part-D என நான்கு பகுதிகளை கொண்டது. புதியதாக விண்ணப்பிப்பவர் Part A, Part B,Part D-ஐ பூர்த்திச் செய்து விண்ணபிக்கவேண்டும்.IEC-ஐ திருத்தம் அல்லது மாற்றம் வேண்டி விண்ணப்பிப்பவர் Part A, Part B,Part-D-ஐ பூர்த்திச் செய்து விண்ணபிக்கவேண்டும்.
Part A:-
Part A-யில் விண்ணப்பிக்கும் நபரின் விபரம், முகவரி, தொடர்பு எண், மற்றும் PAN Card-ன் விபரம், எந்தவகையான நிறுவனம் (Nature of Concern) அதாவது தனிநபர் (Proprietorship) நிறுவனமா, கூட்டு (Partnership) நிறுவனமா அல்லது Limited company-யா என்பதை குறிப்பிடவேண்டும்.எந்த மாதிரியான ஏற்றுமதியாளர் (Type of Exporter) உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவரா (Manufacturer Exporter) அல்லது பிறரிடத்திலிருந்து வாங்கி ஏற்றுமதி செய்பவரா (Merchant Exporter) அல்லது சேவையை அளிப்பவரா (Service Provider) என்பதை குறிப்பிடவேண்டும்.
மேலும் வங்கியின் விபரம் (Bank Account Details) மற்றும் விண்ணப்ப கட்டணத்தின் (Application Fee Details) விவரத்தை குறிப்பிடவேண்டும்.
Part-B:-
Part-B-யில் நிறுவனம் வங்கி நடப்பு கணக்கு வைத்துள்ள வங்கியிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டும். அதில் நிறுவனத்தின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் , வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்ட வருடம் போன்றவை குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளரின் புகைப்படத்தின் மேல் வங்கி அதிகாரி கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
Part C:-
IEC-ஐ திருத்தம் அல்லது மாற்றம் வேண்டி விண்ணப்பிப்பவர் Part C-ஐ பூர்த்தி செய்து விண்ணபிக்கவேண்டும். தனிநபர் நிறுவனமாக இருந்தால் விண்ணப்பிக்கும் நபரின் பிறந்த தேதி , கூட்டு மற்றும் Limited Company-யாக இருந்தால் நிறுவனம் உருவாக்கப்பட்ட தேதியை (Date of incorporation or Date of formation) குறிப்பிடவேண்டும்.
Part D:-
Part D உறுதிமொழி ஆவணம் ஆகும்.
விண்ணப்ப கட்டணத்தை(இப்போது ரூபாய் 250 உள்ளது) வரைவோலையாக (demand Draft) எடுக்க வேண்டும், விண்ணப்ப கட்டணத்தை Electronic Fund Transfer (EFT) முறையிலும் செலுத்தலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் , தேவையான ஆவணம் மற்றும் ரூபாய் 30 க்கு அஞ்சல்தலை ஒட்டிய உறை (Self addressed envelope and stamp of Rs. 30), விண்ணப்பதாரரின் இரண்டு புகைப்படத்தை (Two copies of passport size photographs of the applicant) சேர்த்து அந்தந்த மாவட்டத்திற்குரிய Director general of Foreign Trade (DGFT)-ன் பிராந்திய அலுவலகத்தில் (Regional Office) விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்பம் சரியாக இருப்பின் விண்ணபித்த 15 நாட்களுக்குள் Importer Exporter Code (IEC) Number வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு :http://dgft.gov.in/