2 மாதங்களில் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடல் : இந்திய ஸ்டார்ட் அப்களில் தொடரும் வீழ்ச்சி
இந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டை (funding) பெறுவதிலும் மற்றும் நிறுவனத்தை நடத்துவதிலும் மிகவும் சவாலான ஆண்டாகவே தொடர்கிறது. முதல் ஐந்து மாதங்களில் வெளிப்படையாக கிடைத்துள்ள தரவுகளை (data) கொண்டு பார்த்தோமானால் 18 க்கும் மேற்பட்ட ஸ்டார் அப் நிறுவனங்கள் (startups) தங்கள் நடவடிக்கைகளை மூடியுள்ளன (shutdown).
அதேவேளையில், 2015 ஆம் ஆண்டு முழுவதுமே 15 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக தகவல்கள் தெரிவித்தன. இது மட்டும் மல்ல, இந்த ஆண்டு பல நிறுவனங்கள் தங்கள் குறிப்பிட்ட வணிக மேம்பாடுகளை (business verticals) நிறுத்தியுள்ளன மற்றும் தங்கள் வணிக மாதிரிகளை (business model) மாற்றியுள்ளன. சந்தை நிலைமைகள் (market conditions) இவ்வாறான முடிவுகளை எடுக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கட்டாயப்படுத்தியுள்ளன.
253 ஸ்டார்ட் அப்கள் (startups) இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் (Q2) $1 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டை உயர்த்தியுள்ளன. இதுவரை 2016 முதல் பாதியில், 538 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் $ 2.4 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டு நிதியை (funding) பெற்றுள்ளன.
முதலீட்டை பெறுவதில் சில சாதகமான போக்குகள் இருந்தாலும், மறுபக்கம் நிறுவன செயல்பாட்டு சவால்கள் (operational challenges) காரணமாக சில ஸ்டார்ட் அப்கள் மூடும் நடவடிக்கையை எடுத்துவருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் (ஜூன்-ஜூலை) 11 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடுவதாக அறிவித்துள்ளன. இதில் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் hyperlocal segment ல் உள்ளவை. ஏற்கனவே கடந்த 18 மாதங்களில் hyperlocal பிரிவில் இருந்த 100 ஸ்டார்ட் அப்கள் மூடப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
2 மாதங்களில் மூடப்பட்ட 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்:
BiteClub
தொடங்கப்பட்ட ஆண்டு : 2014
நிறுவனர்கள் : Prateek Agarwal, Aushim Krishan, Siddharth Sharma
பெற்ற முதலீடு : $500K from investors like growX ventures, Powai Lake Ventures and angels including Aneesh Reddy (Capillary Technologies), Ashish Kashyap(Goibibo Group) and Alok Mittal (Canaan Partners).
BiteClub சமையல்காரர்களையும், நுகர்வோர்களையும் இணைக்கும் ஆன்லைன் சந்தை நிறுவனமாகும்.
“நாங்கள் தற்காலிகமாக நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளோம். நிறுவனத்தை மேம்படுத்திய போது மீண்டும் மீண்டும் சில பிரச்சினைகளை சந்தித்தோம். எனவே நாங்கள் பின்னோக்கி அடி எடுத்து வைப்பது சிறந்தது என நினைகின்றோம். அனைத்து பிரச்சினைகளை தீர்வு கண்ட பின்னர், மீண்டும் எங்களது நடவடிக்கைகளை தொடருவோம் ” என பிரதிக் அகர்வால் தெரிவித்திருந்தார். எனினும், கடந்த மே மாதத்திலிருந்து BiteClub யில் எந்த மேம்பாடும் இல்லை.
AppSurfer
Founded In: 2012
Founders: Aniket Awati, Amit Yadav
AppSurfer அண்ட்ராய்டு (Android) அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்திக் கொள்ள உதவும் மென்பொருள் ஆகும். AppSurfer ஸ்டார்ட் அப் பல்வேறு வணிக மாதிரிகளை பரிசோதனை செய்தது மற்றும் பல மாதங்கள் முயன்று software ஐ உருவாக்கியது.
ஆனால் “Google அறிமுகப்படுத்திய ‘Instant Apps’ காரணமாக எங்களால் தாக்குபிடிக்க முடியவில்லை” என்று AppSurfer ஸ்டார்ட் அப் கூறியுள்ளது.
Please Read Also:
இந்தியாவிலுள்ள முக்கிய 10 ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள்
AUTOnCAB
Founded In: 2015
Founders: Vinti Doshi, Aaditya Goyal
AUTOnCAB அப்ளிகேசன் ஆட்டோ ரிக்ஷாக்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் ஸ்டார்ட் அப் ஆகும். Uber மற்றும் Ola நிறுவனங்களின் போட்டியினால் தாக்கு பிடிக்க முடியாமல் நிறுவனத்தை மூடுவதாக இணை நிறுவனர் வின்டி தோஷி தெரிவித்தார்.
Trucksumo
Founded In: 2015
Founders: Nithin Baalay, Arun Rao, Abhishek Bajpai
Trucksumo சரக்கு போக்குவரத்திற்காக லாரிகளை ஆன்லைன் மூலம் ஒன்றிணைக்கும் தளம் ஆகும். அதன் நடவடிக்கைகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. Trucksumo ஸ்டார்ட் அப் Aditya Birla Group ன் incubation programme யில் தேர்தெடுக்கப்பட்ட 24 ஸ்டார்ட் அப்களில் ஒன்று என்பது குறிபிடத்தக்கது.
GrocShop
Founded In: 2014
Founders: Ayush Garg, Rahul Kumar
GrocShop மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்று டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் ஆகும். இலாப வளர்ச்சியை (profitable growth ) காண முடியவில்லை என்று கூறி தனது நடவடிக்கையை நிறுத்தியுள்ளது. GrocShop நிறுவனம் Microsoft’s startup programme ஆன BizSpark யில் பங்கேற்ற நிறுவனமாகும்.
Zimply
Founded In: 2014
Founders: Karan Baweja, Viraj Verma, Ishaan Bhola
Funding: $510K from Matrix Partners, Angel investors including Sahil Barua (Delhivery), Pranay Chulet (Quikr)
Zimply பர்னிச்சர், மின் விளக்குகள், அலங்கார பொருட்கள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஸ்டார்ட் அப் ஆகும். இங்நிறுவனம் தனது நடவடிக்கைளை நிறுத்தியுள்ளது.
GetNow
Founded In: 2014
Founders: Jayesh Bagde, Shailesh Deshpande
Funding: Undisclosed amount in Seed funding
GetNow மளிகை, மின்னணு, மொபைல்கள், கணினிகள், வீட்டில் மற்றும் அலுவலக பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் hyperlocal சந்தை நிறுவனமாகும். இந்த ஸ்டார்ட் அப் இப்போது மூடப்பட்டுள்ளது.
Please Read Also:
2016 ஆம் ஆண்டில் அதிக முதலீட்டு நிதியை பெற்ற 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
AAGAAR
Founded In: 2014
Founders: Deepak Saharawat
Funding: Undisclosed amount of Angel Funding in 2015
AAGAAR பழங்கள் மற்றும் காய்கறிகள், மளிகை, பானங்கள், பால் பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனமாகும் . இப்போது இந்த ஸ்டார்ட் அப் மூடப்பட்டுள்ளது.
Znapin
Founded In: 2013
Founders: Yash Kotak, Nyha Shree, Kevin J Dolan
Funding: Undisclosed amount in seed funding
Znapin மும்பையை சேர்ந்த சமூக வலைத்தள ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இதன நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
Flashdoor
Founded In: 2015
Founders: Ankit Agarwal, Himanshu Gupta
Funding: It had raised undisclosed amount in angel funding in November 2015
Flashdoor சலவை துறையில் (laundry service platform) உள்ள ஸ்டார்ட் அப் ஆகும். போட்டியின் காரணமாக நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
MealHopper Technologies
Founded In: 2015
Founders: Avinash Singh and Aatish Kumar
Funding: Raised $100K in seed funding in October 2015
MealHopper வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவுகளை தேவையானவர்களுடன் இணைக்கும் ஸ்டார்ட் அப் ஆகும். MealHopper தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.