இன்று முதல் சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது, 0.5% வரி விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக
ஜூன் 1 முதல் சேவை வரி 14.5% லிருந்து 15% ஆக உயர்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 0.5% கிருஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan Cess) வரி, சேவை வரியுடன் சுமத்தப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த வரி விதிப்பு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன் படி 14.5% ஆக இருக்கும் சேவை வரி (service tax) 15% ஆக உயர்கிறது.
0.5% கிருஷி கல்யாண் வரி (Krishi Kalyan Cess) முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும். இந்த செஸ் வரி வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த மாட்டாது.
12.36% ஆக இருந்த சேவை வரி (service tax) , 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 14% ஆக உயர்த்தப்பட்டு, ஜூன் 1 லிருந்து வரி உயர்வு நடைமுறைக்கு வந்தது. மேலும் சென்ற ஆண்டு நவம்பர் 15 முதல் 0.5% Swachh Bharat Cess வரி சேவை வரியுடன் சேர்த்து 14.5% ஆக உயர்த்தப்பட்டது.
அரசாங்கம் சேவை வரியை சேவை (service tax) வழங்குவதற்கு மட்டுமே விதிக்கின்றன. பொருட்கள் விற்பதற்கு சேவை வரி பொருந்தாது. சேவை வரியை வாடிக்கையாளர்கள் செலுத்துகின்றனர்.
சேவை வரி ஒரு மறைமுக வரியாகும் (Indirect Tax). இது Finance Act, 1994 கீழ் வருகிறது.
பொதுமக்கள் இன்றிலிருந்து பயண கட்டணங்கள், உணவகங்கள், மொபைல் கட்டணங்கள், இணையத்தள சேவைகள் போன்ற சேவைகளுக்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
PLEASE READ ALSO : ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள்