ராம்தேவின் பதஞ்சலி விரைவில் ஆன்லைன் ஹெல்த் கேர் துறையில் கால்பதிக்க இருக்கிறது
ஹரித்வார் தலைமையிடமாக கொண்ட பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. பதஞ்சலி (Patanjali) நிறுவனம் விரைவில் ஆன்லைன் ஹெல்த் கேர் (healthcare) துறையில் நுழைய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆயுர்வேத (ayurvedic) ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை ஆன்லைன் மூலம் வழங்க உள்ளது.
பதஞ்சலி (Patanjali) பிராண்டை இணையதளத்தில் 5 கோடிக்கும் மேல் ஒவ்வொரு மாதமும் தேடப்படுவதாக ஏற்கனவே பாபா ராமதேவ் கூறியிருந்தார். ஒரு வேலை இந்த இணையதளத்தில் வரவேற்பு கூட பதஞ்சலி ஆன்லைன் ஹெல்த் கேர் தொடங்குவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
2015-16 ஆம் ஆண்டு பதஞ்சலி ஈட்டிய வருமானம் ரூ.5000 கோடியாகும். ஊட்டச்சத்து, மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், நெய், சோப்புகள் மற்றும் தேன், அகர்பத்தி, அழகுசாதன பொருட்கள் போன்ற எப்எம்சிஜி (FMCG) பொருட்களை விற்பனைச் செய்துவருகிறது.
உலகஅளவில் ஆன்லைன் ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்த ஆண்டு $.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது என வெஞ்சர் கேபிடல் (venture capital) தகவல் நிறுவனமான CBinsights தெரிவித்துள்ளது.
BigChemist, Practo, Lybrate போன்ற ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து அதிகமான முதலீட்டை ஈர்த்த நிறுவனமாகும்.
PLEASE READ ALSO: பெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின் Mahila E-haat ஆன்லையின் தளம்