உலகின் முதல்10 பெரிய உற்பத்தியாளர்கள் நாடுகளில் இந்தியா 6 வது இடம் : UNIDO 2015 report
உலகின் முதல் 10 பெரிய உற்பத்தியாளர்கள் நாடுகளில் இந்தியா 6 வது இடத்தை பிடித்துள்ளது. United Nations Industrial Development Organization (UNIDO) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. UNIDO ஆண்டுதோறும் தி இயர்புக் (The Yearbook) – ஐ வெளியிட்டுவருகிறது. சென்ற வருடம் உலகின் முதல் 10 பெரிய உற்பத்தியாளர்கள் நாடுகளில் இந்தியா 9 வது இடத்தில் இருந்தது.
பெரிய உற்பத்தியாளர்கள் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் கொரியா அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்தோனேஷியா இந்த பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மதிப்பு கூட்டு உற்பத்தி (Manufacturing Value Added – MVA) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.6 % 2015 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (Index of Industrial Production – IIP) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1% அதிகரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் உலகளாவிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் (Manufacturing Growth Rates) 2.8% குறைந்துள்ளது என்று UNIDO அறிக்கை கூரியுள்ளது.
United Nations Industrial Development Organization (UNIDO) ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சிறப்பு நிறுவனம் உள்ளது. இது வியன்னா, ஆஸ்திரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
PLEASE READ ALSO: சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம்