20 உற்பத்தி பொருட்களை சிறு குறுந் தொழில் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது
20 உற்பத்தி பொருட்களை சிறு குறுந் தொழில் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. சிறு, குறு தொழில் இருந்து நீக்கப்பட்ட 20 உற்பத்தி பொருட்கள்.
ஊறுக்காய், பட்டாசு, தீக்குச்சி, நோட்டு புத்தகங்கள் தயாரித்தல், பதிவேடுகள்,எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்கள் தயாரித்தல், பூட்டு தயாரித்தல், ஸ்டீல் சேர் டேபிள், ஸ்டீல் பர்னிச்சர், ஸ்டீல் அலமாரி தயாரித்தல், ரோலிங் ஷட்டர் தயாரித்தல், கடுகு எண்ணை, கடலை எண்ணை, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, வீட்டு உபயோக மரப்பொருட்கள் தயாரித்தல், சலவை சோப், ரொட்டி தயாரிப்பு, கண்ணாடி வளையல் தயாரித்தல் என எல்லாமே சிறுதொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பிறப்பித்துள்ள இப்புதிய ஆணையால் இந்தியா முழுவதும் சிறு, குறு தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் புதிய ஆணையால் சிறு, குறு தொழில் புரியும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பெருமளவு குறையும் என பல்வேறு தரப்பினர் இந்த உற்பத்தி பொருட்கள் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.