15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு (International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9 – 11 வரை காந்திகிராம கிராமியப் பல்கலைகழகத்தில்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டை (15th International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தில் நடத்தவுள்ளது.
15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கு முதன்மை தலைப்பாக “கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்’’ என வைக்கப்பட்டுள்ளது. கணினி வழி தமிழ் பல வகையிலும் வளர வேண்டும் எனும் எண்ணத்தோடு இம்மாநாட்டின் இக்கருப்பொருளைக் கொண்டுள்ளது.
“உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” (International Information Technology for Tamil (INFITT)) – “உத்தமம்” எனும் அமைப்பு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது.
இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற 3 பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் கணிமை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் (software companies), சுய தொழில் முனைவோர்கள் (entrepreneurs) பங்கேற்க உள்ளனர்.
மக்கள் அரங்கம்
கண்காட்சி அரங்கம்
புதிய தொழில்முனைவோர் தங்கள் மென்பொருட்கள் சார்ந்த அம்சங்களை மக்களிடையே பரப்ப இந்த அரங்கம் ஒரு வாய்ப்பாக அமையும்.
15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், மதுரை சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Please Read Also: