மத்திய பட்ஜெட் 2016-17: வேளாண்மைக்கு இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது மத்திய பட்ஜெட்டை 2016-17 திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை, வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன. வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடன் வரம்பை ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்ட கடன் வரம்பில் இதுதான் அதிகபட்சம் ஆகும். நடப்பு நிதியாண்டில் இத்தொகை 8.5 லட்சம் கோடியாக உள்ளது.
மத்திய பட்ஜெட் 2016-17: வேளாண்மைக்கு இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
- விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
- 2016-17-ம் நிதியாண்டில் 9 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு.
- பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வழிவகை செய்யப்படும்.
- மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.
- இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
- வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.
PLEASE READ ALSO : மத்திய பட்ஜெட் 2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்
- மழைநீர் பிடிப்புப் பகுதிகளில் உற்பத்தியை அதிகரிக்க பரம்பரகட் கிரிஷி விகாஷ் காத் திட்டத்துக்காக ரூ.412 கோடி ஒதுக்கப்படும்.
- 55 சதவீத மானாவாரி விவசாய நிலங்களில் இயற்கை வேளாண்மை சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- இந்திய உணவுக் கழகம் சார்பில் வேளாண் விளைபொருட்கள் ஆன்லைனில் கொள்முதல் செய்யப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.86,500 கோடியில் 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும். இதன்மூலம் 80.6 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.
- நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.
- பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.
PLEASE READ ALSO : வாழை விவசாயி மற்றும்தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி
- நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க ரூ.60 ஆயிரம் கோடியில் புதிய நீர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- அடுத்த மூன்றாண்டுகளில் புதிய தொழில்நுட்பத்தில் மண் பரிசோதனை மற்றும் நுண்ணூட்டம் அறிவதற்காக மண்வள பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
- விதை பரிசோதனை வசதியுடன் கூடிய 2,000 மாதிரி பரிசோதனை மையங்கள் அடுத்த மூன்றாண்டுகளில் அமைக்கப்படும்.
- வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் நிதித் தேவைகளுக்காக, வரிக்குட்பட்ட அனைத்து சேவைகளின் மீதும் 0.5 சதவீத கிஸான் கல்யாண் வரி (Cess) வரும் ஜூன் முதல் வசூலிக்கப்படும்
- மார்ச் 2017-க்குள் 14 கோடி விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை அட்டை வழங்கங்கப்படும்.
- பருப்பு உற்பத்தியை அதிகரிக்க ரூ.500 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
- கால்நடைத் துறை வளர்ச்சிக் காக ரூ.850 கோடியில் 4 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
PLEASE READ ALSO : உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology,Thanjavur)
- 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.
- விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க, வட்டி சார்ந்த சலுகைகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி தனியாக ஒதுக்கப்படும். முன்னதாக இந்த ஒதுக்கீடு நிதி அமைச்சகத்தின் கீழ் இருந்தது. தற்போது வேளாண் துறையில் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
- பால் உற்பத்தித் துறையில் உள்நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக ரூ.850 கோடி மதிப்பில் தேசிய மையம் அமைக்கப்படும்.