ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (Startups) இந்திய பங்குச்சந்தைகளில் முதல் முறையாக பட்டியலிடும் விதிமுறைகள் எளிதாக்கப்படும்: ஜெயந்த் சின்ஹா
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (Startups) இந்திய பங்குசந்தைகளில் முதல் முறையாக பட்டியலிடும் (Initial public offering (IPO)) விதிமுறைகள் மேலும் எளிதாக்கப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (Startups) இந்திய பங்குச்சந்தைகளில் முதல் முறையாக பட்டியலிடும் (Initial public offering (IPO)) விதிமுறைகளை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி (SEBI) ஏற்கெனவே தளர்த்தி உள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்யும் பட்சத்தில், என்னென்ன சவால்கள் உள்ளன அதை எவ்வாறு களைவது, எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
PLEASE READ ALSO: 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)