கால் டாக்ஸிகளால் உருவெடுக்க இருக்கும் பிரச்சனைகள்

Share & Like

தொடர்ச்சியாக தினமும் கால் டாக்ஸியில் (call taxi) பயணித்து வருகின்றோம். ஜனவரியில் இருந்தது போல மார்ச் இறுதியில் கால் டாக்ஸி டிரைவர்கள் மகிழ்வாக இல்லை. குறிப்பாக ஊபருக்கு (Uber) ஓட்டும் டிரைவர்கள்.

சில வாரங்கள் முன்னர் Uber டிரைவர்கள் ஸ்டிரைக் செய்தது நினைவிருக்கலாம். மோனோபொலியின் (Monopoly) பிரச்சனையை நேரடியாக பார்க்கலாம். கைவசம் அட்டகாசமான தொழில்நுட்பத்தை (technology) வைத்திருக்கின்றார்கள்.

 

Ola
Img Credit: thenextweb.com

 

முன்னர் டிரைவர்களுக்கு இருந்த சலுகைகள், இன்செண்டிவ்ஸ் (incentives) படிப்படியாக குறைத்துள்ளார்கள். காரணம் நேரடியாகவே Uber வண்டிகளை வாங்கி / லீசுக்கு எடுத்து களத்தில் விட்டிருக்கின்றது. டிரைவர்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உண்டு, நாளைக்கு இத்தனை ட்ரிப், இத்தனை மணி நேரமாவது ஓட்டவேண்டும், இத்தனை ஓட்டினா தான் இன்செண்டிவ் என நிறைய இருக்கின்றது. சலுகைகளை வெகுவாக குறைத்துள்ளது. Uber ன் நேரடி லீசில் உள்ள வண்டிகளுக்கு சாப்ட்வேரில் (software) முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கின்றார்கள் டிரைவர்கள்.

 

சில மாதம் முன்னர் வரையில் ஒரு நாளைக்கு 1500 ரூபாய்க்கு ஓட்ட முடிந்தவர்கள் தற்சமயம் வெறும் 600க்கு ஓட்டுகின்றார்கள். வெளி ஊர்களில் இருந்து சென்னையை நோக்கி வந்து குவிந்துள்ள இளைஞர்கள் பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றார்கள்.

 

சுமார் 3-4 வருடங்கள் செழிப்பாக இருந்த கால் டாக்ஸி (call taxi) தொழிலால் நிறைய டிரைவர்கள் புதிதாக கார்களை வாங்கி உள்ளனர். பைனாஸ்சியர்களிடம் வாரவாரம் due கட்ட வேண்டும். தவறினால் மேலும் கடன் கடன். வெயில் காலத்தில் வண்டியை சுமார் 16 மணி நேரம் வரையில் ஓட்டுகின்றார்கள். சாப்பாடு நேரம் என்று கிடையாது. அந்த நேரத்தில் தான் தொடர்ச்சியான் ட்ரிப்புகள் இருக்கும்.

சில ஓட்டுனர்கள் தெரிவித்தது, அவர்களுக்கு க்ரூப் இருக்கின்றதாம் (உபயம் வாட்ஸப்) அங்கே வாடிக்கையாளரிடம் கொஞ்சம் வரட்டுத்தனமாக நடந்துகொள்ள சொல்லப்படுகின்றதாம். வழியை மாற்றினால் முடியாது என சண்டை போடுங்க, அவங்க கஸ்டமர் கேரில் (customer care) புகார் தெரிவிக்கட்டும். Uber பயன்படுத்துவதை குறைக்கட்டும் என்கின்றார்கள். (ஊபர் சாப்ட்வேரில் புதிதாக விளம்பரங்கள் வருவதாகவும் அதில் இடையிடையே ஆபாச விளம்பரங்களும் வருவதாக சிலர் தெரிவித்தனர்).

கடுமையான உழைப்பு அதற்கு ஏற்ற ஊதியம் இல்லை, கடன் சுமை, வெறுப்பு இவை வெகு விரைவில் சமூக பிரச்சனையை உருவாக்கும் என்றார் ஒரு ஓட்டுனர். பள்ளிப்பேருந்தில் ஒரு குழந்தை இறந்த உடன் பேருந்து பற்றிய விழிப்புணர்வு வந்தது, ஒரு உயரை பலி கொடுத்தே பாடம் கற்க தயாராக இருக்கின்றோம். நிறுவனங்களும் அரசும் உடனடியாக தலையிட வேண்டும்.

 

Post By : Umanath Selvam

 


Disclaimer: This is an FB post from Umanath Selvam . The statements, opinions and data contained in these publications are solely those of the contributors and not of  TamilEntrepreneur.com


Please Read This:

customer satisfaction

வாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons