இலவச மீன் வளர்ப்பு பயிற்சி தஞ்சாவூர் மாவட்டத்தில்
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கால்நடைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக மீன் வளர்ப்பு இருக்கிறது.
பல விவசாயிகள் மீன் வளர்ப்பை சாதாரணமாகவே செய்கிறார்கள். அதை ஒரு தொழிலாக கருதுவதில்லை. விவசாயிகள் மீன் வளர்ப்பை ஒரு தொழிலாகவும், தங்களை ஒரு நிறுவனமாகவும் கருதினால் பெரியதாக வளர முடியும். விவசாயிகள் மீன் வளர்ப்பை பயிற்சி பெற்று செய்யும்போது இன்னும் அதிகமாக வருமானம் ஈட்டமுடியும்.
PLEASE READ ALSO: தொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்
மீன் வளர்ப்புக்கான பயிற்சிகள் பல்வேறு இடங்களில் இலவசமாக நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ , ‘அலங்கார மீன் வளர்ப்பு’, ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’ போன்ற பல தலைப்புகளில் இலவச பயிற்சி கொடுக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பெயர்களை மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்து கொண்டால் பயிற்சிக்கான தேதி முடிவானது அவர்களே அழைத்து பயிற்சி கொடுக்கிறார்கள்.
மீன்களை வளர்க்க இடங்கள் தேர்வு செய்யும் முறை, மீன் குளம் அமைத்தல், வளர்ப்புக்கு உகந்த மீன்களை தேர்வு செய்தல், மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை, மீன் வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள், நீராதர மேலாண்மை, நோய் மேலாண்மை, வளர்ப்பு பொருளாதாரம் மற்றும் மீன் வளர்ப்பு சம்மந்தமான தொழில்நுட்பங்கள் போன்றவைகளை பயிற்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த விதமான பயிற்சிகள் மீன் வளர்ப்புத் தொழிலை சிறந்த முறையில் செய்ய உதவும்.
மேலும் விவரங்களுக்கு
செந்தில்குமார், செல்போன்: 94444-64404,
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
PLEASE READ ALSO: சமூக வலைத்தளங்களின் மூலம் முன்னாள் மாணவர்களை (Alumni Networks) இணைக்கும் AlmaConnect