விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அபித் அலி நீமச்வாலா நியமிக்கப்பட்டுள்ளார் (Wipro appoints Abid Ali Neemuchwala as its New chief executive officer)
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்கும் விப்ரோ (Wipro) புதிய தலைமை செயல் அதிகாரியாக ( Chief Executive Officer) அபித் அலி நீமச்வாலாவை (Abid Ali Neemuchwala) நியமிப்பதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தற்போது, விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் டிகே குரியனின் (T.K. Kurien) பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைவதை அடுத்து புதிய தலைமை செயல் அதிகாரி பதவிக்கு அபித் அலி நீமச்வாலா (Abid Ali Neemuchwala) நியமிக்கப்பட்டுள்ளார். டி.கே குரியன் (T.K. Kurien) கடந்த 5 வருடமாக தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். அபித் அலி நீமச்வாலா டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (TCS) நிறுவனத்தில் 23 ஆண்டுகள் மூத்த அதிகரியாக பணிபுரிந்தார். டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் பீபிஓ (TCS BPO) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரலில் விப்ரோ நிறுவனத்தில் இணைந்தார்.
விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் டிகே குரியன் (T.K. Kurien) விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக (Executive Vice Chairman) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி.கே குரியன் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ( Member of the Board) வருகிற மார்ச் 31,2017ஆம் ஆண்டு வரை இருப்பார் எனவும் விப்ரோ தெரிவித்துள்ளது.
டிகே குரியன் மற்றும் அபித் அலி நீமச்வாலா தங்களது புதிய பதவிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிபுரிவார்கள் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
PLEASE READ ALSO : ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 பணக்கார இந்திய குடும்பங்கள் (Forbes 14 Indian families in Asia richest list)