Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கதையை தழுவிய திரைப்படம் The Social Network
உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் (Mark Zuckerberg) கதையை தழுவிய ஹாலிவுட் திரைப்படம் The Social Network ஆகும். இத்திரைப்படத்தில் அவர் Facemash-ஐ ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய கதை, கேமரூன், டைலர் வின்கில்வோஸ் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகியோருடன் Harvard Connection-ஐ உருவாக்க ஒப்புகொள்ளுதல், பிறகு மார்க் ஜுக்கர்பெர்க், எட்வர்டோ சவேரின் (Eduardo Saverin) உடன் இணைந்து சமூக வலைத்தளமான Thefacebook-ஐ உருவாக்குதல் தொடங்குதல், கேமரூன், டைலர் வின்கில்வோஸ் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகியோர் தங்களின் Harvard Connection இணையதளத்தின் ஐடியாவை திருடிவிட்டதாக புகார் கூறுதல், சீன் பார்க்கர் (Sean Parker) என்பவரிடமிருந்து முதலீட்டைப் பெறுதல், பிறகு Thefacebook-ஐ சீன் பார்க்கர் அறிவுறுத்தலின் பெயரில் Facebook என்று மாற்றுதல்.
டைலர் வின்கில்வோஸ் Facebook-ன் வளர்ச்சியை பார்த்த பிறகு தங்களது ஐடியாவை மார்க் ஜுக்கர்பெர்க் திருடிவிட்டதாக வழக்கு தொடருதல், Facebook முதலீட்டை பெற்றபோது எட்வர்டோ சவேரின் வைத்துள்ள பங்குகளின் சதவீதம் குறைந்ததன் காரணமாக அவருக்கும், மார்க் ஜுக்கர்பெர்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு எட்வர்டோ சவேரை Facebook-ன் இணை நிறுவனர் என்ற பெயரை நீக்குதல், பிறகு மார்க் ஜுக்கர்பெர்க் உலகின் இளம் கோடீஸ்வரர் ஆகும் வரை படத்தின் கதை தொடர்கிறது.
The Social Network ஹாலிவுட் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு Ben Mezrich’s எழுதிய The Accidental Billionaires என்ற புத்தகத்தின் தழுவலாகும். ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த திரைப்படம் தனது கதையை ஒத்ததில்லை என்று கூரியது குறிப்பிடத்தக்கது.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்