உலகின் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்ட் : Tata Consultancy Services (TCS)

Share & Like

இந்தியாவின் முன்னணி பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) உலகின் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக (The World’s Most Powerful Brands in IT) மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசிஎஸ் (TCS)

உலகளாவிய முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான Brand Finance நிறுவனம், உலகின் முன்னணி 1000 பிராண்டுகளை மதிப்பிட்டு , மிகவும் பலமுள்ள (The World’s Most Powerful Brands) மற்றும்  உலகின்   மதிப்புள்ள (The World’s Most Valuable Brands) பிராண்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது .

பரிச்சயம் (familiarity), விசுவாசம் (loyalty), ஊழியர்களின்  திருப்தி (staff satisfaction), தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி (Promotion), சந்தைபடுத்துதலில் செய்யப்படும் முதலீடு (Marketing Investment), வாடிக்கையாளர் கவனம் (Customer Focus) மற்றும் நிறுவனத்தின் புகழ் (corporate reputation) போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் பிராண்டுகளை தேர்தேடுத்துள்ளது.

78.8 புள்ளிகளுடன், AA+ தரநிர்ணயித்துடன் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக டிசிஎஸ் (TCS) உருவெடுத்துள்ளது. 

டிசிஎஸ் (TCS)

2010-ஆம் ஆண்டு 2.34 பில்லியன் அமெரிக்க டாலராக ($2.34 billion) இருந்த டிசிஎஸ் (TCS)-ன் பிராண்ட் மதிப்பு 2016-ஆம் ஆண்டில் 9.4 பில்லியன் அமெரிக்க டாலராக ($9.4 billion) உயர்ந்துள்ளது. 

Brand Finance அறிக்கையின்படி, டிசிஎஸ் (TCS) கடந்த 6 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராண்ட்  ஆக உள்ளது. 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons