FAX-க்கு மாற்றான SUPERFAX புதிய தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியினால் FAX-ன் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்போது FAX-ன் இடத்தை EMAIL வசதி மிகவும் ஆக்கரமித்து விட்டன. சில தகவல் பரிமாற்றங்களில் FAX-ன் சேவை இன்றியமையாததாக உள்ளது.
FAX-ஐ போலவே SUPERFAX என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. SUPERFAX ஏன்ற தொழில்நுட்பம் இணையத்தின் மூலம் செயல்படகூடியதாகும். SUPERFAX-க்கு FAX Machine, Paper என்று எதுவும் தேவை இல்லை. SUPERFAX-க்கு FAX-ஐ போலவே தொடர்பு எண்களை (Virtual Phone Number) SUPERFAX சேவை செய்யும் நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன.
இந்த SUPERFAX எண்கள் நமது E-Mail-ளுடன் இணக்கப்படுகின்றன. SUPERFAX எண்ணுக்கு அனுப்பப்படும் செய்திகள் அந்த இமெயிலுக்கு(E-Mail) இணைப்பு கோப்பாக (Attachment file) வந்துவிடும். இதேபோல் நாம் செய்திகளை பிறருக்கு அனுப்புவதற்கு பெறுபவரின் FAX எண்ணை குறிப்பிட்டு செய்தியை இணைப்பு கோப்பாக (Attachment file) நமது இமெயிலில் இருந்து அனுப்பலாம்.
SUPERFAX-ன் தனிச்சிறப்புகள்:
- FAX-ஐ போல இதற்கென்று எவ்வித இயந்திரமும் தேவையில்லை.
- இதற்கு தொலைபேசி இணைப்பு (Telephone Line) தேவையில்லை.
- தகவல்களை பெறுவதற்கு FAX-ஐ போல காகிதம் தேவையில்லை (Paperless).
- இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் எப்போது இயக்கத்திலேயே இருக்கும்(Always On), Never Bussy.
- ஒரே நேரத்தில் பல இடத்திலிருந்து பல செய்திகளை SUPERFAX-ல் பெறலாம்.
- செய்திகள் நமது இமெயிலுக்கு (Email) வரும்போது நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
- எவ்விடத்திலிருந்தும் SUPERFAX-ன் மூலம் தகவல்களை அனுப்பலாம் மற்றும் பெறலாம்.
- ஒரே நேரத்தில் பல FAX எண்களுக்கு தகவல்களை அனுப்பலாம்.
- SUPERFAX தொழில்நுட்பத்தில் உள்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் செய்திகளை அனுப்பலாம்.
இந்த SUPERFAX சேவையை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. SUPERFAX-காண கட்டணம் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். முதலில் SUPERFAX அமைப்பதற்காகவும், SUPERFAX எண்களுக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் வசூலிக்கின்றன. பிறகு நாம் அனுப்பும் தகவலுக்காகவும், நாம் பெறும் தகவலுக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை SUPERFAX சேவை தரும் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. FAX-ன் சேவைகள் தேவைபட்டால் இதற்கு மாற்று புதிய தொழில்நுட்பமான SUPERFAX-ஐ பயன்படுத்தலாம்.