SUBWAY Sandwich Restaurants-உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகம் வெற்றியடைந்த கதை
40000 த்திற்கும் மேற்பட்ட உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே) .2012-ல் இந்த நிறுவனம் ஈட்டிய வருமானம் 18.1 பில்லியன் டாலர் .இத்தனை வளர்ச்சிப் பெற்ற நிறுவனம் வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் வியப்பு!.
கல்லூரியில் சேர்ந்துப் படிக்க வேண்டும் என்பது அந்த இளைஞனின் ஆசை. ஆனால் அவர் குடும்பம் இருந்த சூழ்நிலையில் கல்லூரியைப் பற்றி கனவு காண்பதுக் கூட இயலாத காரியமாக இருந்தது. அவர் குடும்ப நண்பரிடம் படிப்பதற்கு கடன் கேட்பது என்று முடிவு செய்து தன் படிப்பு ஆசையை அந்த குடும்ப நண்பரிடம் சொன்னார் அந்த இளைஞர். அவர் சொல்வதை கேட்ட குடும்ப நண்பர் சொன்ன பதில் இதுதான்,” பேசாமல் ஒரு சான்ட்விச்(Sandwich) கடையை வையேன் “. இதை கேட்டதும் லேசான அதிர்ச்சி மற்றும் தயக்கம் அந்த இளைஞருக்கு .
அதற்கு அந்த குடும்ப நண்பர் சொன்ன விளக்கம் ” சான்ட்விச்(Sandwich) கடையை இந்த பகுதியில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்,அதை கொண்டு கல்லூரிப் படிப்பை படிக்கலாம் என்றார். அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் 1000 டாலர் முதலீட்டுடன் முதல் சாண்ட்வீச் கடையை திறந்தனர். சப்வே (Subway Sandwich) உணவகத்தின் முதல் தொடக்கம் இதுதான் .
அந்த இளைஞர்தான் Subway Restaurants-ஐ தொடங்கிய Fred Deluca (ப்ரெட் டிலூகா) அப்பொழுது அவருக்கு வயது 17 தான்.அமெரிக்காவில் தொழில் முனைவோர்கள் உருவானதற்கு, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தாங்களே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஒரு முக்கிய காரணம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தப்படி வாடிக்கையாளர்கள் வருகையும் அவ்வளவாக இல்லை. கடையிலிருந்து அவர்கள் எதிர்பார்த்த லாபம் வரவில்லை. அதற்கான காரணத்தை டிலூகாவும்(Fred Deluca ) , குடும்ப நண்பரும் ஆராய்ந்தார்கள் . ஆராய்ந்தபோது இரண்டு காரணங்களை கண்டறிந்தார்கள் ஒன்று அவர்கள் வைத்திருந்த கடை மக்கள் பார்வைப்படும் இடத்தில் இல்லை, மற்றொன்று கடையளவு சிறியதாக இருந்ததால் சாப்பிட வருபவர்களுக்கு சிரமமாக இருந்தது.இந்த குறைகளை களைந்து கடையை நல்ல வியாபார வாய்ப்புள்ள இடத்தில் வைத்தார்கள் .
PLEASE READ ALSO : வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை
தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள வேண்டிய வியாபார உத்தி நமக்கு சாதகமான இடத்தில் தொழிலை தொடங்காமல் , நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எற்ற இடத்தில் தொழிலை தொடங்குவது.
புதிய இடத்தில் அமைந்த கடையிலிருந்து நல்ல வருமானம் கிடைத்தது . அவர்கள் பத்து வருடத்துக்குள் 30 கடைகளை திறக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தார்கள். ஆனால் 1974 வரை 16 கடையை மட்டுமே திறந்தார்கள் , அவர்களால் இலக்கில் பாதிதான் அடையமுடிந்தது. சப்வே உணவகத்தை (Subway Restaurant) விரிவடைய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவர்களுக்கு தோன்றிய யோசனைதான் நிறுவன உரிமைமுறை (Franchise) .
Franchise ( நிறுவன உரிமைமுறை):
நிறுவன உரிமைமுறை(Franchise) என்பது சப்வே (Subway) கடைகளை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு அதற்கான உரிமை அளிப்பது. அவரே அந்த சப்வே (Subway) கடையை நடத்த வேண்டும். அதற்காக சப்வே (Subway) நிறுவனத்திற்கு நிறுவன உரிமைத்தொகையை செலுத்த வேண்டும். உணவை விற்று வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சப்வே (Subway) நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.
முதலில் Subway-ஐ துவங்குவதற்கான நிறுவன உரிமைமுறை கட்டணமாக( Franchise Fee) 5000 டாலர் என நிர்ணயித்தார்கள். ஆனால் பல மாதங்கள் வரை Subway-ஐ திறப்பதற்கு யாரும் அணுகவில்லை. அதற்கான காரணத்தை ஆய்வுச் செய்தபோது நிறுவன உரிமைத்தொகை ( Franchise Fee) மற்றவர்களை விட அதிகமாக இருப்பது தெரிந்ததும் நிறுவன உரிமை கட்டணத்தை(Franchise Fee) 5000 டாலரிலிருந்து 1000 டாலராக குறைத்தார்கள். பிறகு நிறைய பேர்(Franchisee) Subway Restaurant-ஐ கடையை திறக்க முன்வந்தார்கள். அமெரிக்கா(America) மற்றும் உலகமெங்கும்(Worldwide) Subway Restaurant விரிவடைய நிறுவன உரிமைமுறை (Franchise) என்ற வணிகமுறைதான் காரணம். Franchisee Fee குறைவாக இருப்பது அதன் பலமாக(Strength) இப்போதும் கருதப்படுகிறது.
மற்ற Subway -ஐ திறக்க காரணமாக இருந்த Franchisee-களுக்கு (Franchisee- நிறுவன உரிமைமுறை கடை வைத்திருப்பவர்) ஊக்கதொகை அளித்தனர். இதன்மூலம் எவ்வித முகவரும் இல்லாமல் பல பகுதியில் பல வாடிக்கையாளரை Subway Restaurant -ஐ திறக்க வைத்தனர்.
PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த FRED DELUCA (Founder of Subway Restaurants)-ன் 15 அறிவுரைகள்
Franchise வணிகமுறை வெற்றி பெற்றதற்கான காரணங்கள்:
Franchise வணிகமுறை வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்களை கூறுகிறார்கள்.
1. எல்லா Subway Sandwich Restaurant-களும் வல்லுநர்களையும் , நிபுணர்களையும்(Specialist) கொண்டிருந்தது.
2.ஒவ்வொரு Franchise-களுக்கும் ஒரு குறிப்பிட்ட விற்பனை பகுதிகளை (Territory) ஒதுக்கியிருந்தார்கள் .
3.Franchisee-களுக்கு அதிகமான ஊக்கத்தொகை(Incentives) அளித்தார்கள்.
2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் Subway Restaurant எண்ணிக்கையில் McDonald’s (World Top Fast Food Restaurant)-ஐ தாண்டினார்கள். அதேபோல் 2010-ல் உலக அளவில் Subway Restaurant– களின் எண்ணிக்கை McDonald’s-ஐ விட அதிகமானது.இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 40,000-த்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டுள்ளது.
Subway Restaurants-களின் வெற்றிக்கான காரணங்கள்:
1. நிறுவன உரிமை முறை (Franchise Method) என்ற உத்தியை கையில்யெடுத்தது .
2 மற்ற நிறுவனங்களை விட குறைவான Franchise Fee.
3. குறைவான கலோரி(Low Calorie) மற்றும் கொழுப்புள்ள (Low Fat) துரித உணவுகள்(Fast Food) கிடைப்பது.
4.மற்ற துரித உணவகத்தை ( KFC, McDonald,Burger King & etc) விட Fresh கிடைப்பது.
5.மற்ற நிறுவனத்தை விட எங்களிடம் குறைவான கொழுப்பு மற்றும் ஆரோக்கியமான(Healthy) உணவுகள் உள்ளன , அதனால் உடல் எடையை (Weight Loss) குறைக்க முடியும் என்ற விளம்பர உத்தி.
6. Franchisee-களுக்கு அதிகமான ஊக்கத்தொகை அளிப்பது.
7.மக்களின் போக்கிற்கு (Touch with Trends) ஏற்றாற்போல் உணவை மாற்றுவது.
8. உணவகத்தை வைப்பதற்கு புதுமையான இடங்களை தேர்தெடுத்தது (Creative Location – Eg:-Colleges,IT Parks,Hospitals,Shopping Mall,Theater,Schools & etc ) .
9. Franchisee- களிடம் வலுவான உறவுமுறை ( Great Franchisor-Franchisee Relation).
PLEASE READ ALSO : வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்