நிதி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சிக்கு உதவுவதற்காக : Startupbootcamp ன் FinTech Accelerator Programme தொடக்கம்
Startupbootcamp உலகளாவிய முன்னணி startup accelerator ஆகும். இது உலகின் பல பகுதிகளில் இதன் Accelerator Programme ஐ தொடங்கி நடத்திவருகிறது. இது உலகமெங்கும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
FinTech, InsurTech, CyberSecurity, IoT (internet on things) & Data Tech, E-Commerce, Digital Health, Food Tech, Smart Transportation & Energy ஆகிய துறைகளில் உலகின் பல பகுதிகளில் Accelerator Programme ஐ தொடங்கி ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு உதவுகிறது.
FinTech Accelerator Programme
Startupbootcamp இப்போது மும்பையில் நிதி தொழில்நுட்பம் (financial technology) சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக FinTech Accelerator Programme ஐ தொடங்கியுள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் இதன் Accelerator Programme யில் பங்கேற்க விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதி வரை நிதி சார்ந்த ஸ்டார்ட் அப் (startup) நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை (Application) பெறும்.
Support
இந்த FinTech Accelerator Programme க்காக தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 3+1 மாதம் வரை Startupbootcam ன் உதவிகளை பெறலாம். தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் வழிகாட்டுதல்கள் (mentorship), அலுவலக இடம் (office space), முதலீட்டாளர்கள் மற்றும் வெஞ்சர் கேபிடல் (venture capital) நிறுவனத்திடமிருந்து முதலீட்டை (funding) பெற உதவுதல், குழு ஒன்றுக்கு ரூபாய் 1.1 மில்லியன் வரை தொகை வழங்கப்படும், ரூபாய் 33 மில்லியன் வரை பங்குதாரர் சேவைகள் பயன்படுத்தி கொள்ளுதல், அமெரிக்கா, இலத்தின் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா சந்தையை பயன்படுத்த உதவுதல் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான பல உதவிகளை வழங்கும்.
Startupbootcamp ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 6% பங்குகளை (equity) தன் வசம் வைத்துகொள்ளும்.
நிபுணத்துவம், தொழில் வல்லுநர் உதவிகளை ஸ்டார்ட் அப்களுக்கு வழங்குவதற்காக ICICI Bank, ICICI Lombard, RBL, AZB & Partners மற்றும் PwC ஆகிய நிதி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
3 மாதம் Accelerator Programme நிறைவடைந்த பின் தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனத்தை பற்றி முதலீட்டாளர்கள் முன்பு சமர்பிக்க Demo Day நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். இதில் முதலீட்டு நிதியை பெற வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு Accelerator Programme க்கும் 10 நிதி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் Startupbootcamp தேர்ந்தெடுக்கப்படும்.
Interested startups can apply for here.
PLEASE READ THIS ARTICLE FOR YOUR GROWTH:
உலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்