ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது
‘ஹெட்ஸ்டார்ட்’ (Headstart) என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.
இப்பயணம், கோயம்புத்தூர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அலுவலகங்களுக்குச் செல்லவுள்ளது. இந்த ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) தொழில் முனைவோர்களுக்காக தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும். தொழில்முனைவு ஆர்வமுள்ளவர்கள் தொழில்முனைவுகளைப் பற்றியும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றியும் இணையத்தளத்தின் மூலமே அறிந்துகொள்ளமுடிகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அனுபவங்களை நேரடியாக பெறுவது கடினமாக உள்ளது.
தொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அனுபவங்களை நேரடியாக பெற்றுத்தருவதே ஸ்டார்ட் அப் பயணதின் (Startup Payanam) லட்சியம் ஆகும்.
முக்கியமாக தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் பயணங்கள், உத்திகள், அனுபவங்கள், அறிவுரைகள் போன்றவற்றை அறிய இந்த ‘ஸ்டார்ட் அப் பயணம்’ மிகவும் உதவிகரமாக இருக்கும். தொழில்முனைவுகளை பற்றி நேரடியாக கற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சந்திக்க உள்ளது. 42 தொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்கள் (பயணிகள்) இதில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் பயணம் (StartUp Payanam) பற்றிய விவரங்களுக்கு:
Mobile : +91 8608871834
இணையதள முகவரி : http://www.startuppayanam.in/