ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்ய, முதலீடு மற்றும் அரசின் உதவிகளை பெற மத்திய அரசின் Startup India Portal மற்றும் Mobile App
தொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிஇந்த ஆண்டு ஜனவரி 16-ல் டெல்லில் தொடங்கி வைத்தார். அப்போது ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் எளிதாக பதிவு செய்வதற்காக உதவ இணையத்தளம் (online portal) மற்றும் Mobile application போன்றவை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சம் (Department of Industrial Policy and Promotion (DIPP)) இணையத்தளத்தை தொடங்கியுள்ளது.
http://startupindia.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
Startupindia.gov.in-ன் முக்கிய பயன்கள்:
- இதில் பதிவு செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் பயன்களை பெறலாம்.
PLEASE READ: Startup India, Standup India திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
- இன்குபேட்டார் (incubators) வசதிகள் பற்றிய தகவல்களை பெறலாம்.
- இன்குபேட்டார்களுடன் இணைவது எளிதாகும்.
- இந்த இணையத்தளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை Venture Capitalist, Angel Investor போன்ற முதலீட்டாளர்களுடன் இணைக்கும் ஒரு பலமாக அமையும்.
- மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி சலுகைகள் கிடைக்கும்.
- அரசின் பல்வேறு திட்டங்களுக்கு startupindia.gov.in இணையத்தளத்திலிருந்து பதிவுச் செய்துகொள்ளலாம்.
- இந்த இணையத்தளத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களை 24 மணி நேரத்திற்குள் பதிவுச் செய்துகொள்ளலாம்.
- அரசின் திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
- அரசு திட்டத்தின் மூலம் மானியங்கள் பெறுவது எளிதாகும்.
- ஸ்டார்ட் அப் நிறுவனர்களில் 3 ஆண்டுகளுக்கு எந்தவித சோதனையும் கிடையாது.