ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்யும் SBI வங்கியின் SBI InCube பிரேத்தியேக கிளை
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்வதற்காக SBI-InCube என்னும் பிரேத்தியேக கிளைகள் செயல்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்படுவதன் காரணமாக தொழில்முனைவோருக்கும் நிதி சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் நோக்குடன் SBI-InCube கிளை தொடங்கப்பட்டுள்ளது.
SBI-INCUBE சேவைகள்
SBI-InCube கிளையில் ஒரே இடத்தில் எல்லாவித நிதிச் சார்ந்த ஆலோசனைகளும் கிடைக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்வதிலிருந்து (registration), பணம் வழங்கீடு (payments), முதலீடுகள் (investments), வரிகள் (tax liabilities), சட்ட சிக்கல்கள் (legal issues), அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் (forex transactions) மற்றும் பிற நிதிச் சார்ந்த ஆலோசனைகள் ( financial advisory)இந்த வங்கி பிரேத்தியேக கிளைகளில் கிடைக்கும்.
மேலும் SBI-InCube கிளையின் மூலம் மாதந்தோறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு செய்திமடல்கள் அனுப்பப்படுகிறது. இதில் புதிய கட்டுப்பாடுகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் போன்ற தகவல்கள் அனுப்பப்படுகிறது.
SBI-InCube கிளைகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வங்கி தேவைகள் சாந்த சரியான தீர்வுகளை வழங்கும்.
PLEASE READ ALSO: தொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்