இந்திய கிராமங்களுக்கு இணையதள வசதியை உருவாக்க வருகிறது GOOGLE-ன் PROJECT LOON திட்டம்
கிராமங்களில் வசிக்கும் மக்களும் இணைய வசதியைப் பயன்படுத்தும் வகையில், நாட்டை இணைய மயமாக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’ (‘DIGITAL INDIA’) என்ற திட்டத்தை ஜூலை 1, 2015 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் .
இத்திட்டத்தின் படி 2020 ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி (INTERNET) பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குக்கிராமங்களில் இணையதள வசதியை ஏற்படுத்துவதற்கு கட்டமைப்பு வசதி (Infrastructure) தேவைப்படுகிறது. கிராமங்களில் இணையதள கட்டமைப்பு வசதியை (Infrastructure) ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் ஏற்படுத்திவருகிறது. அதன் படி குக்கிராமங்களிலும் இணையதள வசதியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசுடன் GOOGLE நிறுவனம் சேர்ந்து செயல்படவுள்ளது. குக்கிராமங்களுக்கு இணையதள வசதியளிக்கும் GOOGLE-ன் ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராமப் புறங்களில் இணையதள வசதியை (INTERNET) ஏற்படுத்துவதற்கு GOOGLE PROJECT LOON (கூகுள் லூன்) போன்ற திட்டங்கள் பேருதவி புரியும் என இந்திய அரசு நம்புகிறது.
PLEASE READ ALSO : GOOGLE’S PROJECT LOON TECHNOLOGY
பலூன்கள் (Balloon) மூலமாக கம்பியில்லா இணைய வசதியை (Wireless Internet)-ஐ எல்லா பகுதிகளுக்கும் வழங்குவதே PROJECT LOON (கூகுள் லூன்) திட்டத்தின் நோக்கமாகும்.கூகிள் நிறுவனம் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து 2.6GHz அலைவரிசையில் இணையதள சேவையை வழங்கும்.
இந்தியா ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் 5-வது நாடாகும். நியூஷ்லாந்து (New Zealand) முதலாவதாகவும், பிரேசில் (BRAZIL) இரண்டாவதாகவும் ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) திட்டத்தை பயன்படுத்திய நாடாகும். இலங்கை (SRILANKA), இந்தோனேசியாவிலும் (INDONESIA) கூகுள் ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) திட்டத்தை செயல்படுத்த போகிறது .
இந்த திட்டத்திற்கு ஆகும் செலவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ல் இந்த திட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் இணையதள வசதியை (Internet) பெறலாம்.