NIDHI திட்டம் : அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்கான ரூ .100 கோடி திட்டம்
தொழில் செய்யும் எண்ணம் உள்ள பல பேருக்கு அவர்களின் ஐடியாக்களை எப்படி தொழிலாக மாற்றுவது என்பது தெளிவில்லாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழில் முனைவை வளர்க்கும் வகையில் பல உதவிகள் மற்றும் ஆதரவுகளை வழங்குகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Department of Science and Technology) ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ .100 கோடி மதிப்புள்ள National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. NIDHI திட்டம் ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான நிதி மற்றும் வளர்த்தெடுப்பதற்க்கான உதவிகளை வழங்குவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் National Science and Technology Entrepreneurship Development Board (NSTEDB) அமைப்பு 100 க்கும் மேற்பட்ட Science and Technology Entrepreneurship Parks (STEPs) மற்றும் Technology Business Incubators (TBIs) க்களை செயல்படுத்துகிறது. இவை தொழில்முனைவோருக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள், கட்டமைப்புகள், வசதிகள், வழிகாட்டல்கள் மற்றும் நிதி முதலீடுகளை வழங்குகிறது.
NIDHI திட்டம்
NIDHI திட்டத்தின் கீழ் 3 திட்டங்கள் உள்ளன.
1 NIDHI Prayas
இந்த திட்டம் ஐடியாவிலிருந்து prototype க்கான முதலீடு நிதி வரை தேவையான உதவிகளை வழங்கும். இந்த திட்டத்தின் கீழ், 10 Prayas centre களை இன்குபேட்டார் (incubator) மையங்களில் அமைக்க திட்டமிட்டிருக்கின்றது.
2. NIDHI Seed Support System
இந்த திட்டம் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கு முதலீடு நிதியை (funding) வழங்கும்.
3. NIDHI Centres of Excellence
இந்த திட்டம் ஸ்டார்ட் அப்கள் உலக அளவில் செல்ல தேவையான உதவிகளை செய்யும்.
NIDHI திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இன்குபேட்டார் (Incubators) அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும். நாட்டில் 100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் இன்குபேட்டார்கள் உள்ளன. இந்த இன்குபேட்டார்கள் தொழில்முனைவோர்கள் தொழிலை தொடங்கி நடத்த வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குகின்றன.
Please Read Also:
இந்தியாவிலுள்ள முக்கிய 10 ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள்